சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இளைய மகளான சௌந்தர்யா ரஜினிகாந்த் ஆக்கர் பிக்சர் ப்ரோடுக்ஷன் நிறுவனத்தை நடத்தி வருகிறார். கோவா திரைப்படம் மூலம் தயாரிப்பாளராக தனது பயணத்தை ஆரம்பித்தார். முதன் முதலாக தனது தந்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை வைத்து கோச்சடையான் படத்தை இயக்கினார். ஆனால் எதிர்பார்த்த அளவு அந்த படம் வெற்றி பெறவில்லை.
3டி தொழில் நுட்பம் மூலம் வெளியான கோச்சடையான் படம் போட்ட முதலீடு பணத்தை எடுக்க முடியாமல் நஷ்டம் அடைந்தது. அடுத்ததாக தனது அக்கா ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் கணவர் தனுஷை வைத்து வேலையில்லா பட்டதாரி 2 படத்தை இயக்கினார். இந்த படம் ஓரளவு மக்களிடையே நல வரவேற்பை பெற்றது. பிசினஸ் செய்வதிலும் வெப் சீரிஸ் இயக்குவதிலும் சௌந்தர்யா ரஜினிகாந்த்துக்கு ஆர்வம் அதிகம். இந்நிலையில் பொன்னியின் செல்வன் நாவலை வெப் சீரிசாக இயக்க உள்ளதாக சௌந்தர்யா அறிவித்தார்.
ஆனால் அதன் பிறகு அந்த வேலை கிடப்பில் போடப்பட்டது. இதனை தொடர்ந்து அசோக் செல்வனை வைத்து வெப் சீரிசை இயக்க முடிவு செய்தார். அதற்கான பூஜைகளும் நடந்தது. ஆனால் இதுவரை அது குறித்த அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. சௌந்தர்யா ரஜினிகாந்த் கடந்த 2021-ஆம் ஆண்டு ஹூட் என்ற குரல் சமூக ஊடகமாக ஒரு தளத்தை ஆரம்பித்தார். தமிழ் உள்ளிட்ட 15 இந்திய மொழிகள் மற்றும் சர்வதேச மொழிகளில் அந்த செயலில் அறிமுகமானது.
படிக்காதவர்கள் கூட எளிமையாக குரல் வழியாக தங்களது கருத்தை தெரிவிக்கும் வகையில் அந்த செயலி உருவாக்கப்பட்டது. வாட்ஸ் அப், பேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூக வலைதள ஊடகங்களுக்கு டப் கொடுக்கும் வகையில் ஹூட் செயலி நல்ல வரவேற்பு பெரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சமீப காலமாக அந்த செயலியை பயன்படுத்தும் நபர்களின் எண்ணிக்கை குறைந்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் சௌந்தர்யா அந்த நிறுவனத்தை மூட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இது குறித்த எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.