குப்பையில் கிடைத்த அப்பாவின் பொக்கிஷம்…! 62 வருட பழைய பாஸ்புக்…. ஒரே நாளில் பல கோடிக்கு அதிபதியான மகன்…!

By Devi Ramu on சித்திரை 30, 2026

Spread the love

சிலி நாட்டைச் சேர்ந்த எக்செசில் ஹினோஜோசா என்பவர், தனது வீட்டைச் சுத்தம் செய்யும்போது குப்பைத் தொட்டியிலிருந்து கண்டெடுத்த ஒரு பழைய வங்கிப் புத்தகம் அவரது வாழ்க்கையையே மாற்றியுள்ளது. கடந்த 1960-70களில் அவரது மறைந்த தந்தை வீடு வாங்குவதற்காகச் சுமார் 1.40 லட்சம் ரூபாயை ஒரு வங்கியில் சேமித்து வைத்திருந்தார். தந்தை இறந்த பிறகு அந்த கணக்கு பற்றி யாருக்கும் தெரியாமல் இருந்த நிலையில், பல தசாப்தங்களுக்குப் பிறகு தற்செயலாகக் கிடைத்த அந்த 62 ஆண்டுகள் பழமையான பாஸ்புக் மூலம் ஹினோஜோசா தற்போது கோடீஸ்வரராகியுள்ளார்.

அந்த பாஸ்புக் சம்பந்தப்பட்ட வங்கி மூடப்பட்டிருந்தாலும், அதில் இருந்த ‘அரசு உத்தரவாதம்’ (State Guarantee) என்ற வாசகம் அவருக்குப் பெரும் பலமாக அமைந்தது. வங்கி திவாலானாலும் பணத்திற்குத் தந்தை வாரிசான தனக்கே உரிமை உண்டு என அவர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். நீண்ட சட்டப் போராட்டத்திற்குப் பிறகு, வட்டியுடன் சேர்த்து சுமார் 9 கோடி ரூபாயை அவருக்கு வழங்க நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது. குப்பையில் கிடைத்த ஒரு பழைய காகிதம், ஒரு சாதாரண மனிதரை ஒரே இரவில் ஒன்பது கோடிக்கு அதிபதியாக்கிய இச்சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.