CINEMA
GOAT திரைப்படத்தின் வெற்றியை புதுமையான முறையில் கொண்டாடிய சினேகா… இணையத்தில் வைரலாகும் புகைப்படம்…
இயக்குனர் வெங்கட் பிரபு பிரம்மாண்டமாக உருவாக்கி நேற்று செப்டம்பர் 5 வெளியாகி இருக்கும் திரைப்படம் தான் GOAT. இது அதிரடி திரில்லர் திரைப்படம் ஆகும். AGS என்டர்டையின்மென்ட் திரைப்படத்தை தயாரித்துள்ளனர். இத்திரைப்படத்தில் நடிகர் விஜயுடன் பிரசாந்த், பிரபுதேவா, மோகன், அஜ்மல் அமீர், ஜெயராம், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, வைபவ், யோகி பாபு, பிரேம்ஜி அமரன் மற்றும் யுகேந்திரன் ஆகியோர் முக்கியமான வேடங்களில் நடித்திருந்தனர்.
இது நடிகர் விஜயின் 68வது திரைப்படம். இதில் விஜய் ரெட்டை வேடங்களில் வயது முதிர்ந்த தோற்றத்திலும் இளம் வயது தோற்றத்திலும் நடித்துள்ளார். இத்திரைப்படத்தில் AI தொழில்நுட்பம் மூலம் விஜயகாந்த் அவர்களையும் நடிக்க வைத்துள்ளனர். இது போன்ற பல சர்ப்ரைஸ் ஆன காட்சிகள் திரைப்படத்தில் இடம் பெற்று இருப்பதாக விமர்சனங்கள் வந்தன.
விஜயின் ரசிகர்கள் இந்த படத்திற்கு மிகவும் எதிர்பார்ப்போடு காத்திருந்த வேளையில் அவர்களுக்கு ட்ரீட்டாகவே இந்த திரைப்படம் அமைந்தது. தியேட்டரில் விசில் சத்தம் பறந்தது. அனைவரும் கொண்டாடும் விதமாகவே பிரம்மாண்டமாக GOAT திரைப்படத்தை இயக்கியிருக்கிறார் வெங்கட் பிரபு.
இந்நிலையில் நேற்று GOAT திரைப்படம் உலகெங்கிலும் வெளியானதை தொடர்ந்து ஒரே நாளில் இத்திரைப்படம் 126 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது. GOAT திரைப்படம் வெற்றி அடைந்ததை தொடர்ந்து நடிகை சினேகா புதுமையாக கொண்டாடி இருக்கிறார். அது என்னவென்றால் சென்னை ஈச்சம்பாக்கம் விஜய் பார்க் திரையரங்கில் நடந்த GOAT வெற்றி விழா நிகழ்ச்சியில் கேக் வெட்டி பொதுமக்களுக்கு மரக்கன்றுகளை வழங்கினார் சினேகா. தற்போது இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.