வாய்ப்பு கேட்டு சென்ற நண்பனை வெளிலே நிப்பாட்டி சிவகார்த்திகேயன் செய்த செயல்.. புலம்பும் SK-வின் பழைய நண்பன்..

By Archana

Updated on:

சின்னத்திரையில் இருந்து பெரிய திரையில் சாதிக்க முடியும் என்ற கருத்திற்கு மிகப்பெரிய எடுத்துக்காட்டு நடிகர் சிவகார்த்திகேயன். அவருக்கு முன் சின்னத்திரையில் இருந்து பலரும் பெரிய திரைக்கு வந்திருந்தாலும் கூட, ஒரு முன்னணி ஹீரோவாக திகழ்வது சிவகார்த்திகேயன் தான். ஒரு நடிகராக, தயாரிப்பாளராக, எழுத்தாளராக, பாடகராக சினிமாவில் வலம் வரும் சிவகார்த்திகேயன் சமீபத்தில் இசையமைப்பாளர் இமான் குடும்ப பிரச்னையில் சிக்கி எதிர்மறையான விமர்சனங்களை பெற்றார்.

24 65ab9ca98f4d4

அதன் பின் சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான அயலான் திரைப்படம் திரையரங்குகளில் வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் நடிகர் பிளாக் பாண்டி கொடுத்திருக்கும் நேர்காணல் தற்போது வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிப்பரப்பான கனா காணும் காலங்கள் தொடரில் மூலம் மிகவும் பிரபலமானவர்தான் பிளாக் பாண்டி. சில சின்னத்திரை தொடர்களில் நடித்து வந்த இவர் வெள்ளிதிரையில் சாட்டை, ஜில்லா போன்ற சில படங்களில் நடித்திருக்கிறார்.

   
actor sivakarthikeyan black pandi

விஜய் டிவியில் இருந்த போது சிவகார்த்திகேயனுடன் பிளாக் பாண்டி நெருக்கமாக பழகி இருந்துள்ளார். இதன் காரணமாக ஒரு விழாவில் சிவா என்ற பிளாக் பாண்டி அழைத்து பேச முற்பட்டு இருக்கிறார். அப்போது சிவகார்த்திகேயன் தனது மேனேஜரை அழைத்து 20 ஆயிரம் பணத்தை பிளாக் பாண்டி இடம் கொடுக்க சொல்லி இருக்கிறாராம். அப்போது பிளாக் பாண்டி என்னுடைய உடல் நன்றாக இல்லை என்றால் இந்த பணத்தை வாங்கிக் கொள்வேன். நான் இப்போது நன்றாக தான் இருக்கிறேன் வாய்ப்பு கிடைத்தால் சினிமாவில் முன்னேறுவேன் என்று கூறுகிறார்.

tamil indian express 2021 12 29T110400407

மேலும் அவரது அருகில் பாண்டியின் அம்மாவும் உடன் இருந்த நிலையில் இந்த பணம் தங்களுக்கு வேண்டாம் என்றும் சிவா கொடுத்ததால் 20 ரூபாய் போதும் என்று அதிலிருந்து எடுத்துக் கொண்டாராம். ஆனால் அந்த மேனேஜர் சிவாவிடம் என்ன சொன்னார் என தெரியவில்லை எனவும், அந்த நிகழ்வுக்கு பிறகு சிவகார்த்திகேயன் தன்னிடம் பேசவில்லை என பிளாக் பாண்டி வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.

author avatar
Archana