தமிழ் சினிமாவில் நடிப்பு என்றால் சிவாஜி கணேசன் என்ற பெயரை இன்று வரை தக்கவைத்துள்ளவர் மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன். கணேசனாக நாடக மேடைகளில் தனது நடிப்பாற்றலால் கலக்கிக் கொண்டிருந்த போது, அவரை பராசக்தி படத்தில் நடிகராக அறிமுகம் செய்தார் நேஷனல் பிக்சர்ஸ் பெருமாள் முதலியார். கருணாநிதி கதை வசனத்தில் கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில் படம் வெளியாகி அதுவரை காணாத வெற்றியைப் பெற்றது.
அந்த படம் அவருக்கு மட்டும் திருப்புமுனையாக அமையாமல் தமிழ் சினிமாவுக்கே ஒரு ட்ரண்ட் செட்டராக அமைந்தது. அதன் பின்னர் அவர் தொட்டதெல்லாம் துலங்கியது. 25 ஆண்டுகளுக்கும் மேல் கதாநாயகனாகவு, அதன் பிறகு 20 ஆண்டுகள் குணச்சித்திர நடிகராகவும் கலக்கினார்.
இப்போதுள்ள ரசிகர்களுக்கு சிவாஜி கணேசனின் நடிப்பு என்றால் அவர் நடித்த எமோஷனலான காட்சிகள்தான் நினைவுக்கு வரும். ஆனால் சிவாஜி ரொமான்ஸ் காட்சிகளில் நடிப்பதிலும் வல்லவராம். குறிப்பாக முத்தக் காட்சிகளில் நடிப்பதில் கூட அவர் வல்லவராம். இது பற்றி மூத்த சினிமா பத்திரிக்கையாளர் சபிதா ஜோசப் ஒரு நேர்காணலில் கூறியுள்ளார்.
அதில் “சிவாஜி முத்தம் கொடுப்பதில் மன்னாதி மன்னன். அவருடன் நடித்த எல்லா நடிகைகளுக்கும் அவர் முத்தம் கொடுப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருக்கும் சிவாஜியின் ரொமாண்டிக் காட்சிகளில், நடிகைகளுக்கு முதுகில், காதில், இடுப்பில், கைகளில், கழுத்தில் என பல இடங்களில் சிவாஜி முத்தம் கொடுப்பது போல உருவாக்கி இருப்பார்கள். வசந்த மாளிகை படத்தில் நடிகை வாணி ஸ்ரீ க்கு கழுத்தில் முத்தம் கொடுத்திருப்பார். இந்தப் போஸ்டரைப் பார்த்தே படம் பார்க்க வந்தவர்கள் நிறைய பேர்.” என்று கூறியுள்ளார்.
அதுமட்டுமில்லாமல் இது சம்மந்தமாக தயாரிப்பாளர் பாலாஜி சிவாஜி கணேசனிடம் சவால் விட்டு தோற்ற ஒரு சம்பவத்தைப் பற்றியும் அவர் பகிர்ந்துள்ளார். அதில் “நடிகைகளுக்கு பாடல் காட்சியில் முத்தம் கொடுத்துவிடுகிறீர்கள், நிஜத்தில் முடிந்தால் கொடுங்கள் எனக் கூறி 500 ரூபாய் பந்தயம் கட்டியுள்ளார். அப்போது படப்பிடிப்பில் தன்னோடு நடித்து கொண்டிருந்த நடிகை வாணி ஸ்ரீ-யிடம் பேச்சுக் கொடுத்தவாறே கன்னத்தில் திடீரென முத்தம் கொடுத்து விட்டாராம். இதைப் பார்த்த பாலாஜி, நீ கில்லாடிடா எனக் கூறி தோல்வியை ஒப்புக்கொண்டு 500 ரூபாயைக் கொடுத்தாராம்” எனக் கூறியுள்ளார்.