Connect with us

சிவாஜி முதல் முதலில் Anti ஹீரோவாக நடித்த படம் எது தெரியுமா?…  பலரும் அறியாத ஆச்சர்ய தகவல்!

CINEMA

சிவாஜி முதல் முதலில் Anti ஹீரோவாக நடித்த படம் எது தெரியுமா?…  பலரும் அறியாத ஆச்சர்ய தகவல்!

 

தமிழ் சினிமாவில் நடிப்பு என்றால் சிவாஜி கணேசன் என்ற பெயரை இன்று வரை தக்கவைத்துள்ளவர் மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன். கணேசனாக நாடக மேடைகளில் தனது நடிப்பாற்றலால் கலக்கிக் கொண்டிருந்த போது, அவரை பராசக்தி படத்தில் நடிகராக அறிமுகம் செய்தார் நேஷனல் பிக்சர்ஸ் பெருமாள் முதலியார். கருணாநிதி கதை வசனத்தில் கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில் படம் வெளியாகி அதுவரை காணாத வெற்றியைப் பெற்றது.

அந்த படம் அவருக்கு மட்டும் திருப்புமுனையாக அமையாமல் தமிழ் சினிமாவுக்கே ஒரு ட்ரண்ட் செட்டராக அமைந்தது. அதன் பின்னர் அவர் தொட்டதெல்லாம் துலங்கியது. 25 ஆண்டுகளுக்கும் மேல் கதாநாயகனாகவு, அதன் பிறகு 20 ஆண்டுகள் குணச்சித்திர நடிகராகவும் கலக்கினார்.

   

ஆனால் சிவாஜியின் நடிப்பு ஓவர் ஆக்டிங் என விமர்சனங்கள் வந்தன. அது விமர்சகர்களிடம் இருந்து மட்டுமில்லை. அவரின் சக நடிகர்களிடம் இருந்து வந்துள்ளது. ஆனால் அதைப் பொருட்படுத்தாமல் கடைக்கோடி ரசிகன் வரை சென்று சேர என்ன செய்யவேண்டுமோ அதை செய்தார் சிவாஜி.

சிவாஜியின் போட்டியாளராக இருந்த எம் ஜி ஆர், தன்னுடைய இமேஜ் திரையிலும் திரைக்கு வெளியிலும் எப்படி இருக்கவேண்டும் என்பதில் திட்டமிட்டு செயல்பட்டு வந்தார். ஆனால் சிவாஜிக்கோ நடிப்புதான் முக்கியம். அதற்கு வாய்ப்பளிக்கும் கதாபாத்திரம் வில்லனாக இருந்தாலும் நடிக்க தயங்க மாட்டார்.

முதல் படத்திலேயே ஹீரோவாக நிரூபித்துவிட்ட சிவாஜி கணேசன், தன்னுடைய ஐந்தாவது படமான திரும்பிப் பார் படத்தில் பெண் பித்து பிடித்து அலையும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்தார். அதுதான் சிவாஜி நடித்த முதல் ஆண்ட்டி ஹீரோ வேடம். அந்த படம் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. அதே போல அடுத்த ஆண்டிலேயே தேசத்தைக் காட்டிக்கொடுக்கும் ஒரு மோசமான வில்லன் கதாபாத்திரத்தில் அந்தநாள் படத்தில் நடித்தார்.

அதன் பின்னர் கூண்டுக்கிளி திரைப்படத்தில் நண்பனின் மனைவியை அடையத் துடிக்கும் கதாபாத்திரத்தில் துணிச்சலாக நடித்தார் சிவாஜி. அவர் எம் ஜி ஆரோடு இணைந்து நடித்த ஒரே படம் இதுதான். அதே போல எதிர்பாராதது என்ற படத்திலும் நெகட்டிவ் தன்மை கொண்ட கதாபாத்திரத்தில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Continue Reading
To Top