CINEMA
சிறகடிக்க ஆசை விஜயாவின் நிஜ குடும்பத்தை பார்த்துள்ளீர்களா?.. வைரலாகும் அழகிய குடும்ப புகைப்படம்..!!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் விஜயா கேரக்டரில் நடித்து வருபவர்தான் நடிகை அனிலா ஸ்ரீ குமரன். இவர் சிறகடிக்க ஆசை சீரியலுக்கு முன்பே, பாவம் கணேசன் உள்ளிட்ட சில சீரியல்களில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்து பிரபலம் அடைந்தவர். தற்போது சிறகடிக்க ஆசை சீரியலில் கதாநாயகனின் அம்மாவாக நடித்து வருகின்றார்.
இந்த நிலையில் சீரியலில் கதாநாயகனின் அம்மாவாக நடித்துக் கொண்டிருந்தாலும் சில வருடங்களுக்கு முன்பு ஜோடி சீசன் 10 நிகழ்ச்சிகளும் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டு தன்னுடைய நடனத் திறமையை காட்டி பலரையும் மெய்சிலிர்க்க வைத்தார். தற்போது சீரியலில் காமெடி கலந்த வில்லத்தனத்தோடு தன்னுடைய நடிப்பை வெளிகாட்டி ரசிகர்களை மிரட்டி வருகிறார்.
தற்போது தமிழ் மக்களின் மனதில் மாமியாராகவும் அம்மாவாகவும் இவர் நிலைத்து நிற்கிறார். சிறகடிக்க ஆசை சீரியலில் தனக்கு பிடித்த மகன் மனோஜ் காக வீட்டில் பல தில்லாலங்கடி வேலைகளை செய்து கொண்டிருப்பதும் கடைசியில் முத்துமிடம் அடிக்கடி மாட்டி தன்னுடைய திருட்டு மொழியை காட்டி பலரையும் சிரிக்கவும் வைத்திருக்கிறார். இந்த நிலையில் நடிகை அணிலா ஸ்ரீ தன்னுடைய கணவர் மற்றும் குழந்தைகளோடு எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க