ஆளே அடையாளம் தெரியலே.. மலேசியாவில் மார்டன் ட்ரெஸ்ஸில் கலக்கும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியல் மீனா.. பிக்ஸ் வைரல்..

By Mahalakshmi on ஆனி 15, 2024

Spread the love

சிறகடிக்க ஆசை சீரியலில் நடித்து வரும் மீனா சிங்கப்பூர் சென்றிருக்கும் புகைப்படங்கள் இணையதில் வெளியாகி வைரலாகி வருகிறது.

   

தமிழ் சினிமாவில் தமிழ் பேசத் தெரிந்த நடிகைகளுக்கு வாய்ப்பு கிடைப்பது என்பது மிகவும் அரிதான விஷயம். பிறமொழி நடிகைகளை நாம் அதிகம் விரும்பி பார்க்கிறோம். ஆனால் நம் தமிழ்நாட்டில் பிறந்து தமிழ் பேசி நடிக்கும் நடிகைகளுக்கு வாய்ப்பு என்பது அவ்வளவு எளிதில் கிடைப்பதில்லை.

   

 

அப்படிதான் நடிகை கோமதிப்பிரியாவுக்கும் அமைந்தது. மதுரையில் பிறந்து வளர்ந்த இவர் சென்னையில் வேலை பார்த்துக் கொண்டிருந்த போது மாடலிங் துறையில் வாய்ப்பு கிடைத்தது. அதனை சரியாக பயன்படுத்திக் கொண்ட இவர் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.

நாம் இருவர் நமக்கு இருவர் என்ற சீரியலில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்த இவருக்கு ஒரு மிகப்பெரிய வாய்ப்பை கொடுத்தது. கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி வந்த ஓவியா என்ற சீரியல் தான் அந்த சீரியலை தொடர்ந்து பிரபலமான இவர் மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழி சீரியல்களிலும் நடிக்க தொடங்கினர்.

தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை என்ற சீரியலில் மீனா கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி வருகின்றார். அனைவரும் இவரை மீனாவாகவே பார்க்க தொடங்கி விட்டார்கள்.

பார்ப்பதற்கு எளிமையாக நம் பக்கத்து வீட்டு பெண் போல் இருப்பதால் இவரை விரைவில் ஏற்றுக் கொண்ட தமிழ் ரசிகர்கள் இவருக்காகவே சீரியலை பார்த்து வருகிறார்கள். சமூக வலைதள பக்கங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கக்கூடிய கோமதி பிரியா அவ்வபோது தான் எடுக்கும் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருவார்.

அந்த வகையில் தற்போது சிங்கப்பூர் சென்றிருக்கும் இவர் மாடன் உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து இருக்கின்றார். இதை பார்த்த ரசிகர்கள் பலரும் நம்ம மீனவ இது என்று ஆச்சரியத்துடன் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.