‘சூப்பர் சிங்கர்’ நடுவர் உன்னிகிருஷ்ணனுக்கு இவ்ளோ பெரிய மகன்?.. மகள்?.. உள்ளாரா!!! வைரலாகும் புகைப்படம் இதோ…

‘சூப்பர் சிங்கர்’ நடுவர் உன்னிகிருஷ்ணனுக்கு இவ்ளோ பெரிய மகன்?.. மகள்?.. உள்ளாரா!!! வைரலாகும் புகைப்படம் இதோ…

சின்னத்திரை ஒளிபரப்பாகும்  ரியாலிட்டி ஷோக்களுக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளனர் அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களுக்கு என ஒரு தனியான ரசிகர் பட்டாளமே உள்ளது.

விஜய் டிவியில்  ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் சூப்பர் ஹிட்  நிகழ்ச்சி  ‘சூப்பர் சிங்கர்’ அந்த நிகழ்ச்சியின்  நடுவர்களில் ஒருவர்  தான் உன்னிகிருஷ்ணன்.

இவர் கேரளா மாவட்டத்தைச்  சேர்ந்தவர். தனது 12 வயதில் இருந்து கர்நாடகா சங்கீதம் கற்றுள்ளார்

இவர் லட்சுமண் சுருதி இசைக்குழுவின் சார்பாக ஒவ்வொரு ஆண்டும் சென்னை காமராஜர் அரங்கத்தில் நடைபெறும் ‘சென்னை திருவையாறு’ இசை மற்றும் நாட்டிய விழாவில் தொடர்ந்து 11 ஆண்டுகளாக பாடி வருகிறார்.

இவர் பாடகர் மட்டுமல்ல சிறந்த பரதநாட்டிய கலைஞர் மற்றும் மோகனிய ஆட்ட கலைஞரும் கூட

பாடகர் உன்னிகிருஷ்ணன் 1994 ஆம் ஆண்டு பிரியா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு உத்ரா என்ற என்ற மகளும் வாசுதேவ் என்ற மகனும் உள்ளனர்.

உன்னிகிருஷ்ணன் மகள் உத்ரா ‘சைவம்’  படத்தில் அழகு என்ற பாடலை  பாடியிருந்தார்.இந்த பாடலுக்காக  தேசிய விருது  கிடைத்தது

அதன் பிறகு பிசாசு, தெறி , லட்சுமி போன்ற பல படங்களில் பாடியிருக்கிறார். உன்னிகிருஷ்ணன் மகனுக்கு கிரிக்கெட் மீது மிகவும் ஆர்வம் கொண்டவர்.

உன்னிகிருஷ்ணன் தமிழில் ஏராளமான பாடல்களை  பாடி மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றுள்ளார்.

இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ,இந்தி  என பல மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களை பாடியுள்ளார்.

தற்போது இவரின் குடும்ப புகைப்படமானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Samrin