தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் கங்குவா. கடந்த நவம்பர் 14ஆம் தேதி வெளியான இந்த திரைப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து பாபி தியோல், திஷா பதானி, நட்டி மற்றும் கருணாஸ் உள்ளிட்டோர் நடித்திருந்த நிலையில் இந்த திரைப்படத்தை ஞானவேல் ராஜா தயாரித்திருந்தார். கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு சூர்யா திரைப்படம் திரையரங்குகளில் வெளியான நிலையில் எதிர்மறை விமர்சனங்களை பெற்றது. அடுத்து சூர்யா கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஒரு படத்தை முடித்து விட்டார். அதன் பிறகு ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் தன்னுடைய 45ஆவது படத்தை தொடங்கியுள்ளார். அந்தப் படத்தின் சூட்டிங் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
சினிமா ஒரு பக்கம் இருந்தாலும் மறுபக்கம் அகரம் பவுண்டேஷன் மூலமாக சூர்யா மருத்துவம் படிக்கும் மாணவர்களுக்கு உதவி செய்து வருகிறார். அது மட்டுமல்லாமல் மறைமுகமாகவும் சூர்யா பல உதவிகளை செய்து வருகின்றார். இப்படியான நிலையில் சூர்யா பற்றி பாடகர் கிரிஷ் சமீபத்தில் அளித்த பேட்டியில் ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தை பகிர்ந்து கொண்டார். அதில், சினிமா துறையிலையே எனக்கு ரொம்ப பிடித்தவர் சூர்யா அண்ணா தான். காரணம் அந்த அளவுக்கு அவர் இறக்க குணம் கொண்டவர். ஒரு நாள் சிங்கம் படத்தின் சூட்டிங் முடித்துவிட்டு நானும் அவரும் காரில் வந்து கொண்டிருந்தோம்.
எங்களுக்கு பின்னால் கேரவன் உட்பட நான்கு வண்டிகள் வந்தது. நாங்கள் சென்று கொண்டிருந்தபோது திடீரென சாலையில் கூட்டமாக இருந்தது. என்ன என்று பார்த்தால் ஒரு நபர் விபத்தில் சிக்கி மண்டை இரண்டாகப் பிளந்து ரத்தத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். உடனே சூர்யா காரில் இருந்து இறங்கி குடுகுடுவென ஓடினார். எனக்கே அத பாத்ததும் ஆச்சரியமா இருந்துச்சு. எங்களுக்கு பின்னாடி வண்டியில வந்த அசிஸ்டன்ட் எல்லோருமே வந்துட்டாங்க. சூர்யா அன்னைக்கு வெள்ளை கலர்ல விலை உயர்ந்த கார வச்சிருந்தாரு. சீட்டு கூட பியூர் ஒயிட்டா இருந்துச்சு. சற்றும் தாமதிக்காமல் சூர்யா உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அந்த நபரை தூக்கி காரில் போட்டுட்டு டிரைவர உடனே வண்டியை எடுக்க சொல்லி திருப்பதியில் இருக்க மிகப்பெரிய மருத்துவமனையில் அட்மிட் பண்ண சொல்லி முடிந்த அளவுக்கு பேசி அவர் உயிரை காப்பாத்திட்டாரு.
அவர் அன்னைக்கு செஞ்ச அந்த விஷயம் என்ன செருப்புல அடிச்ச மாதிரி இருந்துச்சு. யாராலயுமே அப்படி ஒரு விஷயத்தை செய்ய முடியாது. பிறகு சில நாள் கழித்து இந்த சம்பவம் பற்றி நான் அவர்கிட்ட கேட்டபோது, யாருன்னே தெரியாம இப்படி நீங்க உதவி பண்றீங்களே என்று கேட்டதற்கு சூர்யா நான் அவர் யாரோடு நினைச்சிருந்தா என்னோட தம்பி கார்த்தி இன்னைக்கு உயிரோட இருந்திருக்க மாட்டான் என்று சொன்னாரு. அதாவது கார்த்தி காலேஜ் படித்துக் கொண்டிருந்த சமயத்தில் கோடம்பாக்கத்தில் ஒரு விபத்தில் சிக்கி சாலையில் கிடந்த போது அங்கிருந்தவர்கள் சிவகுமார் மகன் என்று கண்டதும் மருத்துவமனையில் அனுமதித்து உயிரை காப்பாற்றினாங்க. அன்னைக்கு யாரோ ஒருத்தங்க செய்த உதவியாளர் தான் இன்னைக்கு என் தம்பி உயிரோட இருக்கான் அப்படின்னு சொன்னாரு. அது மட்டுமல்லாமல் அன்னைக்கு சூர்யா காப்பாத்துன அந்த நபரோட பொண்ணுக்கு அடுத்த வாரத்திலேயே கல்யாணமாம். இதைக் கேட்டதும் எனக்கே ஆச்சரியமா இருந்துச்சு. சினிமாவுல சிறந்த நடிகர் என்றால் அது சூர்யா என்று தான் நான் சொல்வேன் என கிரிஷ் பேசியுள்ளார்.