Connect with us

சினிமாவை தாண்டி இப்படி ஒரு பிஸ்னஸ் செய்கிறாரா சிம்ரன்..! லட்சங்களில் வருமானம்.. வெளியான தகவல்..

CINEMA

சினிமாவை தாண்டி இப்படி ஒரு பிஸ்னஸ் செய்கிறாரா சிம்ரன்..! லட்சங்களில் வருமானம்.. வெளியான தகவல்..

 

இஞ்சி இடுப்பழகி சிம்ரன் அவர்கள் சினிமாத்துறை மட்டுமல்ல மத்த துறையிலும் வெளுத்து வாங்கிக் கொண்டுதான் இருக்கிறார்கள். 90 காலகட்ட இளைஞர்களின் கனவுக்கன்னியாக வலம் வந்தவர் நடிகை சிம்ரன். ஒன்ஸ்மோர் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான அவருக்கு தமிழில் பட வாய்ப்புகள் குவியத்தொடங்கியது. கண்ணுப்பட போகுதயா, பிரியமானவளே, 12பி, பம்மல் கே சம்மந்தம் கன்னத்தில் முத்தமிட்டாள், பஞ்ச தந்திரம் ரமணா, அவள் வருவாளா, நட்புக்காக, துள்ளாத மனமும் துள்ளும், கண்ணெதிரே தோன்றினாள், வாலி, ஜோடி, டைம் என பல படங்களில் நடித்தார்.

10 ஆண்டுகள் தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்தார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஹிந்தி ஆகிய மொழிகளிலும் பல படங்களிலும் நடித்தார்.  வட இந்தியாவில் இருந்து வந்த நடிகை என்றாலும் புடவை கட்டி, தலையில் பூ வைத்தால் அப்படியே தமிழ்நாட்டு பெண் போலவே மாறிவிடுவார். தனது சிறந்த நடிப்புக்காக பிலிம்ஃபேர் விருது, தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார். ஹீரோக்களுக்கு இணையாக நடனம் வெகு சில நடிகைகளில் சிம்ரனும் ஒருவர். டான்ஸ் கிங் விஜய் அவர்களுக்கு டஃப் கொடுக்கும் அளவில் ஆடும் திறமை பெற்ற ஹீரோயின் இவரும் ஒருவர், தட தனது நடனத்திற்கு என்று தனி பேன் பேஸ் வைத்திருந்த நடிகையையும் இவர்தான்.

   

திரைத்துறையில் உச்சத்தில் இருந்த போதே தனது சிறு வயது நண்பரான தீபக் பாகாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். குழந்தை பிறந்த பிறகு மீண்டும் சினிமாவில் ரீ எண்ட்ரி கொடுத்தார் சிம்ரன். அதன் பின் படங்கள் போதிய வரவேற்பை பெறவில்லை, ரியாலிட்டி ஷோ, கேம் ஷோக்களில் நடுவராக பங்கேற்றார். மேலும் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான டான்ஸ் தமிழா டான்ஸ் என்ற நிகழ்ச்சியை தனது கணவருடன் சேர்ந்து சிம்ரன் தயாரித்திருந்தார். இதனிடையே பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் சிம்ரன் பங்கேற்ரார்.

அவர் நடிக்கும் படத்திற்கு போதிய வரவேற்பு வரவில்லை என்றாலும் வாரணம் ஆயிரம் படம் வணிக ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்ற படமாக மாறியது. மேலும் தொடர்ந்து படங்களிலும் நடித்து வருகிறார். சீம ராஜா, பேட்ட, மகான் போன்ற படங்களிலும் நடித்தார். சிம்ரன் கடைசியாக ராக்கெட்ரி நம்பி விளைவு படத்திலும் நடித்தார். சிம்ரன் நடித்த துருவ நட்சத்திரம், அந்தகன் போன்ற படங்கள் விரைவில் வெளியாக உள்ளன.நடிப்பு, தயாரிப்பு மட்டுமின்றி சிம்ரன் ஹோட்டல் பிசினஸ் ஒன்றையும் நடத்தி வருகிறார். சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள அக்கரை பகுதியின் மெயின் ரோட்டிலேயே அமைந்துள்ள இந்த ஹோட்டலின் பெயர் கோட்கா. முதலில் துணி கடையாக இதனை தொடங்கிய சிம்ரன் பின்னர் நட்சத்திர ஹோட்டலாக மாற்றி உள்ளார். அவர் ஹோட்டலில் சாப்பாடு விலை எல்லாம் ஆயிரம் ரூபாய்க்கு மேல்தான் உள்ளதாம், இங்கு சவுத் இந்தியன், நார்த் இந்தியன், கான்டினென்ட், சைனீஸ் போன்ற வகையான உணவுகள் அனைத்தும் இங்கு கிடைக்குமா டெசர்ட் ஆகியவையும் அடங்கும் இதில். இதுபோல் சிம்ரன் அவர்கள் சீம துறையும் தாண்டி பல துறைகளில் ஈடுபட்டு வருகிறார்.

#image_title

author avatar
Ranjith Kumar
Continue Reading
To Top