தமிழில் ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்த நடிகை சனா கான் தற்போதைய புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. சினிமாவில் நடிக்கும் பல நடிகர், நடிகைகள் ஒரு சில திரைப்படங்களிலேயே காணாமல் போய்விடுகிறார்கள். திருமணத்திற்கு பிறகு பெரும்பாலான நடிகைகள் நடிக்க வருவது கிடையாது.
நடிகைகளும் திருமணத்திற்கு பிறகு குடும்பம், குழந்தைகள் என்று செட்டில் ஆகிவிடுகிறார்கள். தமிழில் ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் நல்ல வரவேற்பை பெற்ற நடிகை சனா கான் இயக்குனர் ஜெகநாதன் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான ஈ திரைப்படத்தில் கவர்ச்சி நடனம் ஆடியதன் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் சனா கான்.
அதனைத் தொடர்ந்து சிம்பு நடிப்பில் வெளிவந்த சிலம்பாட்டம் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து அறிமுகமானார் . இந்த திரைப்படம் ஹிட்டானதால் அடுத்தடுத்து இவருக்கு வாய்ப்புகள் வரத் தொடங்கியது. அதன்படி ராதா மோகன் இயக்கிய பயணம் அதைத்தொடர்ந்து பரத்துக்கு ஜோடியாக தம்பிக்கு எந்த ஊரு உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருந்தார்.
தமிழ் மட்டும் இல்லாமல் இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளிலும் இவர் நடித்திருக்கின்றார். கடைசியாக இவர் நடித்திருந்த திரைப்படம் அயோக்கியா. இப்படத்தில் இடம்பெறும் வேறலெவல் என்ற பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடியிருப்பார். கடந்த 2020 ஆம் ஆண்டு முப்தி அனஸ் சையத் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பிறகு சினிமாவில் நடிப்பதை நிறுத்திக் கொண்ட சனாக்கான் தொடர்ந்து தனது கணவரின் தொழிலை கவனித்து வருகிறார். சமீபத்தில் இவருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்திருந்தது. இவரின் தற்போதைய புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. அதில் தனது கணவர் மற்றும் குழந்தையுடன் இருக்கின்றார், இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் சிலம்பாட்டம் படத்தில் நடித்த நடிகையா இது? என்று ஆச்சரியத்துடன் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.