என்ன ஆச்சு இவங்களுக்கு..? காலில் அடிபட்டு ஸ்ட்ரக்சரில் படுத்திருக்கும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் நடிகை..!!

By Priya Ram on ஜூலை 1, 2024

Spread the love

நடிகை சரண்யா துரடி சின்னத்திரை சீரியல் மூலம் மக்களுடைய பிரபலமானார். தற்பொழுது சரண்யா துரடி பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்துக் கொண்டிருக்கிறார். சரண்யா செய்தி வாசிப்பாளராக தனது பயணத்தை தொடங்கினார். அதன் பிறகு சன் டிவி மற்றும் விஜய் டிவியில் ஒளிபரப்பான பல சின்னத்திரை சீரியல்களில் நடித்தார்.

sharanya turadi

   

இப்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் இரண்டாம் பாகத்தில் தங்கமயில் கதாபாத்திரத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். தெலுங்கு சீரியல்களிலும் சரண்யா துரடி நடித்துள்ளார். தெலுங்கில் ரோஜா என்ற சீரியலிலும், சன் டிவியில் ஒளிபரப்பான ரன் சீரியலிலும் சரண்யா நடித்தார்.

   

 

நெஞ்சம் மறப்பதில்லை சீரியல் சரண்யா துரடி நடித்துள்ளார். அவருக்கு மிகப்பெரிய வரவேற்பை தேடி தந்தது நெஞ்சம் மறப்பதில்லை சீரியல் தான். அதன் பிறகு ஆயுத எழுத்து சீரியலிலும் நடித்தார். ஜீ தமிழ் நடன தொலைக்காட்சியில் போட்டியாளராக பங்கேற்க அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அதிலும் கலந்து கொண்டு தனது திறமையை வெளிப்படுத்தினார்.

சரண்யாவுக்கு பைக் ஓட்டுவது மிகவும் பிடிக்கும். இப்போது முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக சரண்யா சிகிச்சை பெற்று வருகிறார். அதிலிருந்து தான் மீண்டு வரும் புகைப்படங்களை சரண்யா துரடி சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் சரண்யா துரடிக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

#image_title