Connect with us

புயல் வேகத்தில் பட்ஜெட்டை தாண்டி இந்தியன் 2-வை எடுக்கும் ஷங்கர்.. விழி பிதுங்கி நிக்கும் LYCA..

CINEMA

புயல் வேகத்தில் பட்ஜெட்டை தாண்டி இந்தியன் 2-வை எடுக்கும் ஷங்கர்.. விழி பிதுங்கி நிக்கும் LYCA..

 

1996 இல் A.M ரத்தினம் அவர்களின் தயாரிப்பில் சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், மனிஷா கொயிரலா நடிப்பில் ஏ.ஆர் ரகுமான் அவர்கள் இசையில் வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்த படம் தான் “இந்தியன்”. படத்தில் கமல்ஹாசன் அவர்கள் டபுள் ஆக்சன் இல் மாபெரும் நடிப்பில் வெளிவந்து ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக அமைந்தது. தற்போது இப்படத் தொடர்ச்சியாக இந்தியன் 2 படம் எடுக்கப்பட்டு வருகிறது. இப்படத்தில் சங்கர் அவர்கள் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் லைக்கா மற்றும் ரெட் ஜெயின் தயாரிப்பில் உருவாகிக் கொண்டிருக்கிறது.

இவர்களுடன் எஸ்.ஜே. சூர்யா, பிரியா பவானி சங்கர், பாபி சிம்ஹா, பிரம்மானந்தம், ஜாகீர் உசேன், பியூஷ் மிஸ்ரா, காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், நெடுமுடி வேணு, விவேக், காளிதாஸ் ஜெயராம், குல்ஷன் குரோவர், சமுத்திரக்கனி, குரு சோமசுந்தரம், குரு சோமசுந்தரம், டெல்லி, அஸ்வினி தங்கராஜ், தீபா சங்கர் சினிமா பட்டாளமே நடித்து வருகிறது. சங்கர் என்றாலே பிரம்மாண்டம் என்பதால் இப்படத்தில் மாபெரும் பட்ஜெட்டை வைத்து மிகச் சிறப்பாக உருவாக்கிக் கொண்டிருக்கிறது. படம் தற்போது மார்ச் முதல் வாரம் முடிந்து விடும் என்று அறிவித்து இருந்த நிலையில், சித்தார் மற்றும் பிரியா பவானி சங்கர் இடையே உள்ள காதல் பாடல் எடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகின்றது.

   

அதன் பின்னதாக 30 கோடி அளவில் கமல்ஹாசனை வைத்து ஒரு பாடல் இயக்க போவதாக தெரிவித்து இருந்தார்கள். இவர்கள் 450 கோடி பட்ஜெட்டில் இரண்டு மற்றும் மூன்று பாகங்களாக எடுக்க போகும் இப்படம் பட்ஜெட்டை தாண்டி சென்றதால் லைக்கா நிறுவனம் கொஞ்சம் குறைத்துக் கொள்ளும்படி சங்கரிடம் கேட்டுக் கொண்டார்கள். ஆனால் சங்கர் எடுக்கும் வேகத்தை பார்த்தால் பட்ஜெட் குறையாமல் தாண்டிய சமயத்தில், இப்படத்தை தாங்குவதற்காக ரெட் செண்ட் நிறுவனம் லைக்கா நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்க முன் வந்தது, இருப்பினும் ஷங்கர் அவர்கள் வடசென்னை பகுதியில் படப்பிடிப்பு தளத்தில் மாபெரும் செட்களை அமைப்பதும், அங்கு இருக்கும் எல்லா வீடுகளுக்கும் கலர் கலராக பெயிண்ட் அமைத்து படம் வரைந்து படத்திற்கான அமைப்புக்காக பல கோடி செலவை செய்து வருகிறார்.

இப்படியே சென்றால் லைக்கா நிறுவனம் தனது தலையில் துண்டை தான் போட வேண்டும். ஆனால் ரெட் ஜாயிண்ட் நிறுவனம் இணைந்து இருப்பதால் லைக்காவுக்கு பெரிதளவு பாதிப்பு இல்லை என்றும் படத்தின் மீதி செலவுகளை ரெட் ஜெயின் பார்த்துக் கொள்வதாக தகவல் வெளியாகி உள்ளது.

author avatar
Ranjith Kumar
Continue Reading
To Top