ரசகுல்லா வாங்க கூட காசு இல்ல.. எம்.ஜி.ஆரின் ஆசையை நிறைவேற்றிய சர்வர்.. பல வருடங்களுக்கு பிறகு நடந்த நெகிழ்ச்சி சம்பவம்..!!

By Priya Ram on ஆகஸ்ட் 11, 2024

Spread the love

சினிமாவுக்காக தங்களது வாழ்க்கையை அர்ப்பணித்த நடிகர்களில் ஒருவர் எம்ஜிஆர். இவர் ரிக்ஷாக்காரன் படத்தில் நடித்ததற்காக பாரத் பட்டம் பெற்றுள்ளார். முதல் முதலில் தமிழ்நாட்டில் பரத் பட்டம் பெற்ற கலைஞர் எம் ஜி ஆர் தான். அந்த பட்டத்தை பெறுவதற்காக கல்கத்தா போய்விட்டு எம்ஜிஆர் திரும்பினார். அப்போது கதாசிரியர் ரவீந்திரனிடம் எம்ஜிஆர் கல்கத்தா பயணம் மனநிறைவை தந்ததாக கூறியுள்ளார். என்ன காரணம் என ரவிந்தர் கேட்டதற்கு எம் ஜி ஆர் தனக்கு நடந்த பழைய அனுபவம் பற்றி கூறியுள்ளார்.

   

எம்ஜிஆரும், அவரது அண்ணனும் மாயா மச்சீந்திரா படத்தில் நடிப்பதற்காக கல்கத்தா சென்றுள்ளனர். அப்போது சென்னையில் திரைப்படங்களை படமாக்குவதற்கு அவ்வளவு வசதிகள் கிடையாது. மாதம் எம்.ஜி.ஆருக்கு 200 ரூபாய் சம்பளம் கொடுத்துள்ளனர். கல்கத்தா போன எம்.ஜி.ஆருக்கு அவர்கள் கொடுத்த உணவை மட்டும் தான் சாப்பிட முடிந்தது. கலக்கத்தாவின் பிரபலமான ரசகுல்லாவை சாப்பிட வேண்டும் என எம்.ஜி.ஆருக்கு அதிக ஆசை இருந்ததாம். அப்போது ரசகுல்லாவின் விலை நாலனா.

   

 

அதைக் கூட வாங்க பணம் இல்லாமல் எம்.ஜி.ஆர் இருந்துள்ளார். அப்போது சாப்பாடு பரிமாறிக் கொண்டிருந்த சர்வர் குல்திப் என்பவர் எம்ஜிஆருக்கு ரசகுல்லாவை வாங்கி கொடுத்துள்ளார். இந்த நிலையில் பல வருடங்கள் கழித்து பாரத் பட்டத்தை வாங்க சென்ற எம்.ஜி.ஆர்-க்கு தனக்கு ரசகுல்லா வாங்கி கொடுத்த சர்வர் குல்தீப்பின் ஞாபகம் வந்துள்ளது. திரும்பி பார்த்தபோது வயதான தோற்றத்தில் குல்தீப் கையில் ஒரு மாலையுடன் எம்ஜிஆரை வரவேற்பதற்காக அங்கு நின்று கொண்டிருந்தாராம்.

உடனே எம்.ஜி.ஆர் குல்தீப்பை கட்டிப்பிடித்து அவரது அறைக்கு அழைத்து சென்று நலம் விசாரித்துள்ளார். தனக்கு இரண்டு பேரப்பிள்ளைகள் இருப்பதாக குல்தீப் கூறியுள்ளார். பின்னர் எம்ஜிஆர் குல்தீப்புக்கு ஒரு பெரிய தொகையை கொடுத்துள்ளார். அதனை குல்தீப் வாங்க மறுத்துள்ளார். ஆனாலும் விடாப்பிடியாக நின்று எம்ஜிஆர் அவரது கையில் பணத்தை திணித்துவிட்டு வந்துள்ளார். அதனால் தான் கல்கத்தா பயணம் நல்ல மனநிறைவை தந்ததாக எம்ஜிஆர் கூறியுள்ளார். காலம் கடந்தாலும் தனது நன்றியை தெரிவித்து நிம்மதி எம்.ஜி.ஆர் முகத்தில் தெரிந்ததாக ரவீந்திரன் ஒரு பத்திரிகையை பேட்டியில் கூறியுள்ளார்.

#image_title