CINEMA
இரட்டை குழந்தைகளின் முதல் பிறந்த நாளை கொண்டாடிய சந்திரலேகா சீரியல் நடிகை.. வெளியான அழகிய புகைப்படங்கள்..!
சன் டிவியில் ஒளிபரப்பப்பட்ட சந்திரலேகா சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நடிகை ஸ்வேதா பந்தேகர். சரிகம நிறுவனம் இந்த சீரியலை தயாரித்து இருந்தது. இந்த சீரியல் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த சீரியலில் நடித்த நடிகர் நடிகைகளும் மக்கள் மத்தியில் பிரபலமாகினர்.
அதன்படி இந்த சீரியலில் சந்திரன் என்ற கதாபாத்திரத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நடிகை ஸ்வேதா.
இவர் ஆரம்பத்தில் ஒரு சில விளம்பர படங்களில் நடித்திருந்தார். அதன் பிறகு இவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
இவர் தமிழில் 2007 ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான ஆழ்வார் திரைப்படத்தில் அஜித்தின் தங்கையாக நடித்திருந்தார். முதல் படமே தல படம் என்பதால் அடுத்த படத்திலேயே இவருக்கு கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
2008 ஆம் ஆண்டு சத்யா நடிப்பில் வெளியான வள்ளுவன் வாசுகி சத்யா படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். இறுதியாக ஜெயம் ரவி நடிப்பில் வெளியான பூலோகம் திரைப்படத்தில் இவர் நடித்திருந்தார்.
அதன் பிறகு இவருக்கு சினிமாவில் வாய்ப்பு குறைய தொடங்கியதால் 2009 ஆம் ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பான மகள் என்ற தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.
இருந்தாலும் செம்பருத்தி சீரியல் நடித்ததன் மூலம் தான் ரசிகர்கள் மத்தியில் மேலும் பிரபலமானார்.
இந்த நிலையில் இவர் கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சன் மியூசிக் தொலைக்காட்சியில் விஜேவாக இருந்த மால் முருகனை திருமணம் செய்து கொண்டார். இதனைத் தொடர்ந்து இவருக்கு கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் ஒரு பெண் மற்றும் ஒரு ஆண் என இரட்டை குழந்தைகள் பிறந்தன.
இந்த நிலையில் தனது குழந்தைகளின் முதல் பிறந்த நாளை ஸ்வேதா கொண்டாடிய நிலையில் அது தொடர்பான புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.