நாங்க லிவிங் டுகெதர்-ல இருந்தோம்.. கல்யாணத்துல எங்க பையன் எங்க கூட தான் இருந்தான்.. பிரபல சீரியல் நடிகை பகிர்ந்த தகவல்.

By admin on ஆனி 22, 2024

Spread the love

பிரபல சின்னத்திரை நடிகைகள் ஸ்வேதா பாரதி அண்ணாமலை சீரியல் மூலம் திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். முதல் சீரியலிலேயே அவருக்கு மக்களிடைய நல்ல வரவேற்பு கிடைத்தது. முன்னதாக பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் ஸ்வேதா வேலை பார்த்துள்ளார். அதன் பிறகு தான் சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

PHOTOS : சீரியல் நடிகை ஸ்வேதா பாரதியை நியாபகம் இருக்கா? இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்.. | Serial Actress Swetha Bharathi Family Photos - Oneindia Tamil

   

அண்ணாமலை சீரியலில் அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததால் அடுத்தடுத்து வம்சம் மலர்கள் உள்ளிட்ட சூப்பர் ஹிட் சீரியல்களில் நடித்தார். ஸ்வேதாவுக்கு டான்ஸ் மீது அதிக ஆர்வம். கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மானாட மயிலாட நிகழ்ச்சியில் ஸ்வேதா பங்கேற்றார். அதன் பிறகு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் மாம் நிகழ்ச்சியிலும் தனது மகனுடன் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் ஸ்வேதா டைட்டில் வின்னர் பட்டத்தை வென்றார்.

   

PHOTOS : சீரியல் நடிகை ஸ்வேதா பாரதியை நியாபகம் இருக்கா? இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்.. | Serial Actress Swetha Bharathi Family Photos - Oneindia Tamil

 

நடிகை ஸ்வேதா ரோஜா மற்றும் செம்பருத்தி சீரியல்களில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்தார். இந்த நிலையில் ஸ்வேதா அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது, கல்யாணத்திற்கு முன்பே நானும் எனது கணவரும் லிவிங் டுகதர் வாழ்க்கையில் வாழ்ந்து வந்தோம். எங்கள் திருமணம் நடக்கும் போது பெரிய பையன் எங்களுடன் தான் இருந்தார்.

PHOTOS : சீரியல் நடிகை ஸ்வேதா பாரதியை நியாபகம் இருக்கா? இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்.. | Serial Actress Swetha Bharathi Family Photos - Oneindia Tamil

திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கூட நான், என் கணவர் எங்களுக்கு நடுவே எங்களது மகன் அமர்ந்திருந்தான். அது ஒரு பெரிய கதை. எனது அம்மா எதிர்ப்பு தெரிவித்ததால் வீட்டை விட்டு வெளியே வந்து விட்டேன். அதன் பிறகு நானும் என் கணவரும் லிவிங் டுகெதர் வாழ்க்கையில் வாழ்ந்தோம். நாங்கள் ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணினோம். எனது மகன் பிறந்து வளர்ந்த பிறகு தான் இரு வீட்டார் சம்மதத்துடன் பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டோம் என கூறியுள்ளார்.