‘கோலங்கள்’ சீரியல் நடிகை ஆர்த்தி இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா?… ஆள் அடையாளம் தெரியாம இப்படி மாறிட்டாங்களே… நீங்களே பாருங்க…

By Begam

Published on:

தமிழ் தொலைக்காட்சி வரலாற்றிலேயே ஆயிரம் எபிசோட்களை கடந்த முதல் தொடர் சன் டிவியில் ஒளிபரப்பான ‘கோலங்கள்’ சீரியலாகும். இந்த சீரியல் 2003 முதல் 2009 வரை மொத்தம் 1530 எபிசோடுகளுடன் நிறைவடைந்தது. இந்த சீரியலுக்கு இன்று வரை ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

   

இந்த தொடரில் தேவயானி, தீபா வெங்கட், திருச்செல்வம், அஜய் கபூர், பூர்ணிமா என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இயக்குனர் திருச்செல்வம் இயக்கத்தில் வெளியாக இந்த தொடர் மக்கள் மத்தியில் அதிகம் கவனத்தை ஈர்த்தது. இந்த சீரியல் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் நடிகை ஸ்ரீவித்யா.

இவர் கோலங்கள் சீரியலில் ஆர்த்தி கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார். இதைத்தொடர்ந்து பிரபல சூப்பர் ஹிட் சீரியலான ‘தென்றல்’ சீரியலிலும் நடித்திருந்தார். அதோடு மட்டுமில்லாமல் வெள்ளித்திரையிலும் ஒரு சில படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ஸ்ரீவித்யா. இவர் சின்னத்திரை, வெள்ளித்திரை என இரண்டிலும் பிசியாக நடித்துக் கொண்டிருந்தபோது நெருங்கிய உறவினர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார்.

தற்பொழுது இவர் பல சீரியல்களில் பிசியாக நடித்துக் கொண்டுள்ளார்.  சொந்த தொழில், சீரியல் என இரண்டிலும் பிஸியாக இருக்கும் நடிகை ஸ்ரீவித்யாவின் சமீபத்திய புகைப்படம் இணையத்தில் வெளியாகிய வைரலாகி வருகிறது. இதோ அவரின் லேட்டஸ்ட் புகைப்படம்…