csk வெற்றியை சூப்பராக கொண்டாடிய சீரியல் நடிகை சரண்யா... அவரே வெளியிட்ட வைரல் வீடியோ... - Tamizhanmedia.net
Connect with us

Tamizhanmedia.net

csk வெற்றியை சூப்பராக கொண்டாடிய சீரியல் நடிகை சரண்யா… அவரே வெளியிட்ட வைரல் வீடியோ…

CINEMA

csk வெற்றியை சூப்பராக கொண்டாடிய சீரியல் நடிகை சரண்யா… அவரே வெளியிட்ட வைரல் வீடியோ…

16வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடர் கடந்த மார்ச் மாதம் 31ஆம் தேதி தொடங்கியது.இதில் பத்து அணிகள் பங்கேற்ற நிலையில் இந்த போட்டியில் லீக் சுற்றுகள் விறுவிறுப்பாக நடந்தது.

அதன் முடிவில் முதல் நான்கு இடங்கள் பிடித்த அணிகளான குஜராத் டைட்டன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் செயின்ஸ் ஆகிய அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது.

அதனைத் தொடர்ந்து நடைபெற்ற பிளே ஆப் சுற்றும் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறின.

 

கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஐபிஎல் இறுதிப் போட்டி நேற்று முன்தினம் இரவு 7.30 மணிக்கு தொடங்குவதாக இருந்தது.

குஜராத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இந்த போட்டி நடைபெறுவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. இதுவரை நான்கு முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐந்தாவது முறையும் கலந்த முறை சாம்பியன் பட்டம் வென்ற குஜராத் டைட்டன்ஸ் சாம்பியன் பட்டத்தையும் தக்க வைக்கும் முனைப்பில் களத்தில் இறங்க தயாராகிக் கொண்டிருந்தன.

 

இந்த போட்டியை இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டு காத்திருந்தனர்.

ஐபிஎல் போட்டி தொடங்கியதில் இருந்தே சினிமா பிரபலங்கள் பலரும் போட்டியை நேரில் கண்டு ரசித்தனர். அது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அனைத்தும் தினம் தோறும் இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலானது.

ஆனால் எதிர்பாராத விதமாக தொடர்ந்து மழை பெய்ததால் போட்டி நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டது. இரவு 11 மணி வரை மழை நீடித்ததால் போட்டி ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நேற்று இரவு தொடங்கிய இந்த போட்டி இன்று அதிகாலை 2 மணிக்கு முடிவடைந்தது. மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் சிஎஸ்கே அணி ஐபிஎல் கோப்பையை தட்டி தூக்கியது. இதன் மூலமாக ஐந்தாவது முறையாக ஐபிஎல் கோப்பையை சென்னை சூப்பர் கிங்ஸ் வென்று உள்ளது. இந்த இறுதி போட்டியை தமிழ் சினிமா பிரபலங்கள் ஏராளமானோர் ஸ்டேடியத்தில் கண்டு கழித்தனர்.

அதாவது நடிகை வரலட்சுமி சரத்குமார், ரஜினியின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், காமெடி நடிகர் சதீஷ், இயக்குனர் விக்னேஷ் சிவன், தோனியின் மனைவி சாக்ஷி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்ட நிலையில் அது தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இவர்களைப்போலவே தற்பொழுது பல பிரபலங்கள் ஐபிஎல் மேட்சை வீட்டிலிருந்தபடியே கண்டு மகிழ்ந்துள்ளனர். அவர்களும் தங்களது மகிழ்ச்சியான தருணங்களை இணையத்தில் விடியோவாக பதிவு செய்துள்ளனர். அந்தவகையில் சீரியல் நடிகை சரண்யா தனது மகிழ்ச்சியான தருணத்தை இணையத்தில் வீடியோவாக பதிவு செய்துள்ளார்.

சின்னத்திரையில் பிரபல சீரியல் நடிகையாக வலம் வருபவர் நடிகை சரண்யா. இவர் நடித்த பல சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இந்நிலையில் அவர் நேற்று நடந்த போட்டியில் சிஎஸ்கே வெற்றி பெற்றதை கொண்டாடி மகிழ்ந்த வீடியோ மற்றும் புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்துள்ளார்.

16வது ஐபிஎல் சீசனின் இறுதி போட்டி கிட்டத்தட்ட மூன்று நாட்களாக நடைபெற்றுள்ளது. நேற்று முன்தினம் இறுதி போட்டி நடைபெறுவதாக இருந்த நிலையில் அன்று மழைக் குறுக்கிட்டதால்  போட்டி நேற்றைய தினத்துக்கு மாற்றப்பட்டு நேற்று நடைபெற்றது.

அதில் குஜராத் அணி பேட்டிங் செய்து முடித்தவுடன் சி எஸ் கே அணி பேட்டிங் தொடங்கியது. அப்போது 3 பந்துகள் மட்டுமே வீசப்பட்ட நிலையில் மீண்டும் மழை குறுக்கிட்டதால் போட்டி நிறுத்தப்பட்டது.  நள்ளிரவு 12. 10 மணிக்கு போட்டி மீண்டும் தொடங்கியது.

இதில் 171 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆட்டத்தை தொடங்கிய சிஎஸ்கே அணி நிர்ணயிக்கப்பட்ட 15 ஓவரில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்து ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் மகத்தான வெற்றி பெற்று, ஐந்தாவது முறையாக கோப்பையை பெற்றது.

இதனை வீட்டில் இருந்தபடி தொலைக்காட்சியில் கண்டு களித்த சீரியல் நடிகை சரண்யா, சிஎஸ்கே வின் வெற்றியை கொண்டாடிய அழகிய தருணத்தை வீடியோவாக இணையத்தில் பதிவு செய்துள்ளார். தற்பொழுது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Continue Reading
Advertisement hello world
You may also like...

More in CINEMA

To Top