
CINEMA
நம்ம ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ மீனாவா இது?… பள்ளி பருவத்தில் சும்மா எப்படி இருக்காங்க… புகைப்படம் படுவைரல்…
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சூப்பர்ஹிட் சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் கூட்டு குடும்பத்தை பற்றி அழகாக எடுத்துரைக்கின்றனர். கூட்டு குடும்பத்தில் ஏற்படும் கஷ்டங்கள், அன்பு ,பாசம் என அனைத்தையும் இந்த சீரியல் காட்டி வருவதால் இல்லத்தரசிகளை வெகுவாக கவர்ந்துள்ளது என்று கூறலாம்.
இந்த சீரியலில் மீனா எனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் நடிகை ஹேமா. இவர் இதற்கு முன்னர் பல சீரியலில் நடித்திருந்தாலும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தான் இவருக்கு ஒரு தனி அடையாளத்தை ஏற்படுத்தித் தந்துள்ளது என்று கூறலாம். இதன் மூலம் இவர் மக்கள் மத்தியில் மிகப் பிரபலமடைந்துள்ளார்.
நடிகை மீனாவுக்கு இன்று பெருமளவு ரசிகர்கள் கூட்டம் இணையத்தில் உள்ளது.நடிகை ஹேமா ‘ஹேமா டைரி’ என்ற youtube சேனல் ஒன்றை தொடங்கி நடத்தி வருகிறார். இதில் அவ்வப்பொழுது அவர் தனது குடும்ப வீடியோக்களையும், மேக்கப், அழகு சாதன குறிப்புகள் போன்ற பல வீடியோக்களையும் பதிவு செய்து வருகிறார்.
சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்ட்டிவாக இருக்கக்கூடியவர் நடிகை ஹேமா. இவர் அவ்வப்பொழுது தனது குடும்பத்துடன் இருக்கும் அழகான புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்து வருகிறார். தற்பொழுது இவர் பள்ளி பருவத்தில் இருக்கும் அழகான புகைப்படம் ஒன்று வெளியாகி ரசிகர்களால் அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகிறது. இதோ அந்த புகைப்படம்…