‘நீங்க முஸ்லீம் தானே… அப்புறம் ஏன் இப்படி ஹராம் செய்றீங்க’… ரசிகரின் கேள்விக்கு சரியான பதிலடி கொடுத்த பரீனா… அப்படி என்ன சொன்னாங்க தெரியுமா?…

‘நீங்க முஸ்லீம் தானே… அப்புறம் ஏன் இப்படி ஹராம் செய்றீங்க’… ரசிகரின் கேள்விக்கு சரியான பதிலடி கொடுத்த பரீனா… அப்படி என்ன சொன்னாங்க தெரியுமா?…

விஜய் தொலைக்காட்சியில் ஹிட்டாக ஒளிபரப்பாகி நிறைவடைந்த சீரியல் தான் ‘பாரதி கண்ணம்மா’. மக்கள் மத்தியில் கிடைத்த மாபெரும் வரவேற்பை தொடர்ந்து இந்த சீரியலின் இரண்டாம் பாகம் தற்பொழுது ஒளிபரப்பாகி வருகிறது. முதல் சீசனில் ஹீரோ பாரதியை ஒருதலையாக காதலித்து அவரை அடைய பல வில்லத்தனங்களை செய்யும் கொடூர வில்லியாக, டாக்டர் வெண்பாவாக நடித்து மிரள வைத்து வருபவர் நடிகை ஃபரீனா.

ஃபரீனா இதற்கு முன்பு பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக இருந்துள்ளார். மேலும் சில சீரியல்களிலும் நடித்துள்ளார். அவர் 2017ல் ரஹ்மான் உபைத் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இதைத்தொடர்ந்து கர்ப்பமான அவர், நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நிலையிலும் அவர் தொடரில் இருந்து விலகாமல் தொடர்ந்து நடித்தார்.

இவருக்கு தற்பொழுது ஒரு அழகான ஆண் குழந்தை உள்ளது. சமூகலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் நடிகை பரினா. இவரின் கதாபாத்திரத்தை கொண்டு இவரை திட்டாதவர்கள் யாரும் இருக்க முடியாது. இவர் தற்பொழுது ”’பாரதி கண்ணம்மா சீசன் 2′ விலும் வில்லி கதாபாத்திரத்தில் களமிறங்கியுள்ளார்.

தற்பொழுது இவரது எபிசோடுகளும் ‘பாரதி கண்ணம்மா 2’ வில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் நடிகை பரீனாவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 1.2 மில்லியன் ரசிகர்கள் பின்தொடர்கின்றனர். தற்பொழுது ரசிகர் ஒருவர் நடிகை பரீனாவிடம் ‘நீங்கள் முஸ்லிம் தானே. தினமும் தொழுகுவீங்களா? அப்புறம் ஏன் இப்படி ஹராம் செய்றீங்க?’ என்று கேள்வி கேட்டுள்ளார்.

அதற்கு பதில் அளித்த பரீனா, ‘சமூக ஊடகங்களில் இருப்பது, டிவி சீரியல் பார்ப்பது, ஒரு பிரபலத்தை பின் தொடர்வது மற்றும் அவரை கேள்வி கேட்பது இவையெல்லாம் முதலில் ஹராம்  பட்டியலில் தான் உள்ளது. முதலில் உன்னுடைய பின்புறத்தை சுத்தம் செய்துவிட்டு என்னிடம் கேள்வி கேள்’ என்ற பதில் அளித்துள்ளார். தற்பொழுது இந்த பதிவு இணையத்தில் படுவைரலாக்கப்பட்டு வருகிறது. இதோ அந்த பதிவு….

Begam