நடிகை அக்ஷிதா பூபையா சன் டிவியில் ஒளிபரப்பான கண்ணான கண்ணே சீரியல் மூலம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார். அதன் பிறகு ஜீ தமிழில் ஒளிபரப்பான சீதாராமன், சுமங்கலி, தாழம்பூர் உள்ளிட்ட சீரியல்களிலும் அக்ஷிதா நடித்ததார்.
ஒரு சில தெலுங்கு திரைப்படங்களில் அக்ஷயா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பான தமிழும், சரஸ்வதியும் சீரியலில் மேக்னா கதா பாத்திரத்தில் நடித்துள்ளார். பிரபல தயாரிப்பாளரான சுரேஷுக்கும் அக்ஷிதாவுக்கும் இடையே காதல் ஏற்பட்டது.
தயாரிப்பு பணிகளின் போது இருவரும் சந்தித்துக் கொண்டனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. அக்ஷிதா மைசூரில் பள்ளி படிப்பு மற்றும் பட்டப் படிப்பை முடித்தார். சாய் பிரகாஷ் இயக்கத்தில் உருவான ரியல் போலீஸ் திரைப்படத்தில் அக்ஷிதா நடித்தார். இந்த படம் 2017-ஆம் ஆண்டு ரிலீஸ் ஆனது.
சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் அக்ஷிதா பூபையா அவ்வபோது போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிடுவார். அந்த வகையில் நீச்சல் உடையில் கிளாமராக போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டார். அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வேகமாக் பரவி வருகிறது.

#image_title