பிரபல சீரியல் நடிகர் ராஜ்கமலுக்கு இவ்வளவு பெரிய மகளா?… ஹீரோயின் போல வளர்ந்துட்டாங்களே… லேட்டஸ்ட் கிளிக்ஸ்…

By Begam

Published on:

சன் டிவியில் ஒளிபரப்பான அபியும் நானும் சீரியலின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகர் ராஜ்கமல்.

   

இந்த சீரியலில் அபியின் வளர்ப்பு தந்தை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதன் மூலம் அவருக்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த ஆதரவு கிடைத்து வருகிறது.

இவர் 2003இல் தொலைக்காட்சி தொடரில் நடிகராக அறிமுகமானார். இதைத்தொடர்ந்து தற்பொழுது வரை பல சீரியல்களில் நடித்து வருகின்றார்.

இவர் சின்னத்திரையில் மட்டும் இன்றி வெள்ளித்திரையிலும் சரோஜா, லிங்கா, நவீன சரஸ்வதி சபதம் போன்ற எண்ணற்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.

நடிகர் ராஜ்கமல் சீரியல் நடிகை லதாவை திருமணம் செய்து கொண்டார். இருவரும் இணைந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபல நடன ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டனர்.

நடிகர் நடிகர் ராஜ்கமலின் மனைவி ஆன நடிகை லதாராவும் மெட்டிஒலி, செல்வி மற்றும் திருமதி செல்வம் போன்ற ஹிட் சீரியல்களில் அனைத்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்.

அதோடு மட்டுமில்லாமல் இவர் பல திரைப்படங்களிலும் துணிக்கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். ராஜ் கமல் லதா தம்பதியினருக்கு லாரா மற்றும் ராகா என்று இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் ராஜ்கமல். இவர் தற்பொழுது தனது மகளுடன் ‘விண்ணைத்தாண்டி வருவாயா படம் பார்க்க தியேட்டருக்கு சென்றுள்ளார்.

அங்கு தன் மகளுடன் எடுத்துக் கொண்டு அழகான புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்துள்ளார். இப் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ‘உங்களுக்கு இவ்வளவு பெரிய மகளா?’ என்று ஆச்சரியத்தில் கமெண்ட் செய்து வருகின்றனர்.