தவெக சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கக் குதிரை பேரம் நடத்தியதாகத் தொடரப்பட்ட வழக்கில் நேற்று நீதிமன்றத்தில் ஆஜராகாத நிலையில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் அரசியல் வட்டாரத்தில் மீண்டும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திடீர் உடல்நலக் குறைவு காரணமாகவே அவர் மருத்துவமனைக்குச் சென்றுள்ளதாக அவரது சகோதரர் அசோக் உறுதிப்படுத்திய போதிலும், அவர் எந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்ற விவரத்தைக் குறிப்பிட மறுத்துவிட்டார். வழக்கு விசாரணை தீவிரமடைந்துள்ள சூழலில், மருத்துவமனை பற்றிய தகவல்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது பலத்த சந்தேகங்களையும் காரசாரமான விவாதங்களையும் கிளப்பியுள்ளது.
