உதயநிதிக்கு செக் வைக்கும் சேகர்பாபு?… சென்னை திமுகவில் நடக்கும் ரகசிய ஆபரேஷன்…. அலறும் அறிவாலயம்…..!

By Nanthini on புரட்டாதி 2, 2026

Spread the love

திமுகவில் உதயநிதி ஸ்டாலினுக்கு நெருக்கமான இளம் தலைமுறையினருக்கு முக்கிய பொறுப்புகளும் அதிகாரமும் வழங்கப்படுவதைத் தடுக்கும் நோக்கில், சேகர்பாபு கட்சிக்குள் தீவிர உள்ளடி வேலைகளில் ஈடுபட்டு வருவதாகப் பரபரப்புத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னை அமைப்பில் மேற்கொள்ளப்பட்ட மறுசீரமைப்பின் போது, சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி மற்றும் ஆயிரம் விளக்கு தொகுதிகளுடன் அண்ணா நகர் தொகுதியையும் இணைத்து, உதயநிதியின் ஆதரவாளரான சிற்றரசுவை மாவட்டச் செயலாளராக நியமிக்கத் தலைமை முடிவு செய்திருந்த நிலையில், சேகர்பாபுவின் பலத்த தலையீடு மற்றும் எதிர்ப்பின் காரணமாகவே அந்த நியமனம் கைவிடப்பட்டதாகக் கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி, பரந்தாமன் மற்றும் கே.பி. சங்கர் போன்ற வளர்ந்து வரும் இளம் நிர்வாகிகள் முக்கியப் பொறுப்புகளுக்கு வருவதையும் அவர் விரும்பவில்லை எனக் கட்சி வட்டாரங்களில் பேசப்பட்டு வருவது சென்னை திமுக அரசியல் களத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.