FLASH NEWS: விடிய விடிய பரபரப்பு… அமைச்சர் சேகர்பாபு, மேயர் பிரியா அதிரடி கைது… தமிழக அரசியலை உலுக்கும் போதைப்பொருள் சர்ச்சை….!

By Nanthini on ஆனி 29, 2026

Spread the love

தமிழகத்தில் போதைப்பொருள் சர்ச்சையில் சிக்கியுள்ள அமைச்சர் சரத்குமாரைப் பதவியிலிருந்து நீக்க வலியுறுத்தி, சென்னை புரசைவாக்கத்தில் திமுவினர் திரண்டு தீவிர ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்குத் தலைமை தாங்கிய சென்னை கிழக்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பி.கே.சேகர்பாபு மற்றும் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா உள்ளிட்ட ஏராளமானோரை காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்தனர்.

கைது செய்யப்படுவதற்கு முன்பாக செய்தியாளர்களிடம் பேசிய சேகர்பாபு, தற்போதைய தவெக அரசுக்கு எதிராகத் தங்களது போராட்டம் இன்னும் ஓயாது என்றும், இப்போது நடந்துள்ளது வெறும் “டிரெய்லர்” மட்டுமே என்றும், இனிவரும் நாட்களிலும் போராட்டங்கள் வீரியத்துடன் தொடரும் எனவும் காட்டமாக எச்சரித்தார். இந்த பரபரப்பான சூழ்நிலைக்கு மத்தியில், சென்னையைத் தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் இதே கோரிக்கையை முன்வைத்து போராடிய திமுகவினர் பரவலாகக் கைது செய்யப்பட்டுள்ளது மாநில அரசியலில் பெரும் பதற்றத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.