பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் குறித்து அவதூறாகப் பேசி மன்னிப்பு கேட்ட ருசிகா சிங் என்ற பெண் தொடர்பாக, நோய்டாவில் உள்ள சலூன் உரிமையாளர் புதிய தகவல்களை வெளியிட்டுள்ளார். அப்பெண் தங்கள் நிறுவனத்தின் ஊழியர் அல்ல என்றும், சில நாட்கள் மட்டுமே நெயில் ஆர்ட் பயிற்சி பெறுவதற்காக வந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், தன்னை “மென்ஷில் ஜெயின்” என்ற போலிப் பெயரிலேயே அறிமுகப்படுத்திக் கொண்டதாகவும், பலமுறை வலியுறுத்தியும் தனது அடையாள ஆவணங்களைச் சமர்ப்பிக்கத் தவறியதால் பயிற்சியிலிருந்து நீக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
இதேவேளையில், அப்பெண்ணின் வயது குறித்த பெரும் சர்ச்சையும் எழுந்துள்ளது. அவர் தனக்கு 15 வயது மட்டுமே ஆகிறது என்று மன்னிப்புக் கோரிய வீடியோவில் கூறியிருந்த போதிலும், காவல் துறையின் முதல் தகவல் அறிக்கையில் அவரது வயது 25 எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் அவர் குறித்த சந்தேகங்கள் அதிகரித்துள்ள நிலையில், காவல் துறை தரப்பில் இது குறித்து அதிகாரப்பூர்வ விளக்கங்கள் எதுவும் இன்னும் அளிக்கப்படவில்லை.
