“திமுக – டி.கே.சிவகுமார் ரகசிய உடன்பாடு?”….. பின்னணியில் நடப்பது என்ன?…. உண்மையை உடைக்கும் நிர்மல் குமார்… வெடிக்கும் புதிய அரசியல் சர்ச்சை….!

By Nanthini on ஆவணி 2, 2026

Spread the love

சென்னை: காவிரி நீர் விவகாரத்தில் திமுகவுக்கும் கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமாருக்கும் இடையே ரகசிய உடன்பாடு நிலவுவதாக தமிழக சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கர்நாடக அரசு காவிரி நீரைக் திறக்க மறுப்பதற்குப் பின்னால் திமுக குடும்பத்தின் பின்னணி உள்ளதோ என்ற சந்தேகம் எழுவதாகத் தெரிவித்தார். காங்கிரஸ் தலைமை சொல்வதைக் கேட்பதை விட, திமுக குடும்பத்தின் வழிகாட்டுதலையே டி.கே.சிவகுமார் தீவிரமாகப் பின்பற்றி வருகிறார் எனப் பல தரப்பினரும் தெரிவித்து வருவதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

திமுகவின் விருப்பத்திற்கு ஏற்பவே டி.கே.சிவகுமார் அறிக்கைகளை வெளியிட்டு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார் என்று குறிப்பிட்ட அமைச்சர், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி காலத்தில் ஜெயலலிதாவுக்கு நல்ல பெயர் கிடைத்துவிடக் கூடாது என்பதற்காகத் தண்ணீரைத் திறக்கவிடாமல் முட்டுக்கட்டை போட்ட வரலாற்றை நினைவு கூர்ந்தார். அதே பாணியைத்தான் தற்போதும் திமுக கையாண்டு வருகிறது என்றும், தற்போதைய முதல்வர் விஜய்யை தனிமைப்படுத்தி அரசியலில் பின்னடைவை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் மு.க.ஸ்டாலின் செயல்பட்டு வருவதாகவும் குற்றம் சாட்டினார்.

   

தமிழக மக்களின் உரிமைகளுக்காகவும், காவிரி நீர்ப் பங்கீட்டை உறுதி செய்யவும் நாளை உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட உள்ளது. கடந்த 30 ஆண்டுகளாக காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்குத் தொடர் பின்னடைவை ஏற்படுத்திய திமுக, தற்போதைய முதல்வருக்கு நெருக்கடியை உருவாக்குவதாக நினைத்துக் கொண்டு தமிழக மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிப்பதாக அமைச்சர் நிர்மல் குமார் தனது பேட்டியில் காட்டமாகத் தெரிவித்தார்.