ஜோதிட சாஸ்திரங்களின்படி சனிபகவானின் நகர்வு என்பது கூர்ந்து கவனிக்கப்படுகின்றது. ஏனென்றால் இவருடைய நகர்வு வெளிப்பாடு 12 ராசிகளுக்கும் பலனை அளிக்கும். வருகின்ற நவம்பர் 28ஆம் தேதி சனி பகவானும், நவம்பர் 30ஆம் தேதி புதனும் வக்ர நிவர்த்தி அடைய இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு கிரகங்களின் பெயர்ச்சி குறிப்பிட்ட சில ராசிக்காரர்களின் வாழ்வில் நல்ல மாற்றங்களை கொண்டு வரப்போகிறது. நமக்கு நல்ல காலம் எப்போது பிறக்கும் என்று ஏக்கத்துடன் இருக்கும் ராசிக்காரர்களுக்கு சனிபகவான் அதிர்ஷ்டத்தை வழங்க போகிறார். அதன்படி கிரகங்கள் நிலை மாறினாலே ஏதாவது மாற்றம் கிடைக்கும் என்று காத்திருக்கும் ராசிக்காரர்களுக்கு சனி பகவானின் வக்ர நிவர்த்தி எந்த மாதிரியான அதிர்ஷ்டத்தை அளிக்கும் என்பது குறித்து இதில் பார்க்கலாம்.
மகரம்:
மகர ராசியினரின் மூன்றாம் வீட்டில் சனியும் 11 வது வீட்டில் புதனும் வக்ர நிவர்த்தி அடையப் போகும் இந்த பெயர்ச்சியால் உங்களுக்கு வழக்கமாக இருந்த தைரியத்தை விட இந்த நாட்களில் கொஞ்சம் தைரியம் அதிகமாகவே இருக்கும். வாழ்க்கையில் மகிழ்ச்சியே இல்லை என்று புலம்புபவர்களை பார்த்து நல்ல காலம் பிறந்து விட்டது என்று நீங்களே சொல்லக்கூடிய காலம் தான் இது. அந்த அளவிற்கு உங்களுடைய வாழ்க்கையில் மாற்றம் ஏற்படும்.
கும்பம்:
கும்ப ராசியினருக்கு இரண்டாம் வீட்டில் சனியும் பத்தாவது வீட்டில் புதனும் பயிற்சி அடைகின்றனர். இதனால் பணம் விஷயத்தில் கூடுதல் கவனம் உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் உங்களை அறியாமல் சில வெற்றி கை சேரும். புதிய பாதை திறக்கும். அதனால் நம்பிக்கையை மட்டும் நீங்கள் இழந்து விடாதீர்கள். நீங்கள் இழந்த கௌரவம் உங்கள் வீடு தேடி வந்து சேரும்
மிதுனம்:
மிதுன ராசியில் பிறந்தவர்களின் ஜாதகத்தில் பத்தாவது வீட்டில் சனியும் ஆறாவது வீட்டில் புதனும் வக்கிர நிவர்த்தி அடைய இருப்பதால் வேலை மற்றும் தொழில் செய்பவர்களுக்கு நினைத்துப் பார்க்க முடியாத அளவு மாற்றம் ஏற்படும். எப்போதும் போல இல்லாமல் சனி பகவானின் அருள் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை வழங்கும்.
இரும்புச்சத்து குறைபாடு இரத்த சோகைக்கு மிகவும் பொதுவான காரணமாகும். பெண்கள் மற்றும் சைவ உணவு உண்பவர்கள் அதிக ஆபத்தில் உள்ளனர்.…
தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்க நெருங்க தேர்தல் களமும் நாளுக்கு நாள் சூடு பிடித்துக் கொண்டே வருகிறது. என்னதான்…
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள ஜான்சி பகுதியில் வசித்து வரும் ரவீந்திர பிரதாப் சிங் என்பவருக்கு ஷீலா சிங் என்ற மனைவியும்…
இன்றைய(14.11.2025) ராசிபலன் குறித்து பார்க்கலாம். மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று ஐந்தாமிட சந்திரன் இருப்பதால் நன்மை கிடைக்கும். உங்கள் தந்தை மற்றும்…
தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் களம் நான்கு முனை போட்டியாக உள்ளது. அதாவது திமுக, அதிமுக, தமிழக…
உத்தரபிரதேச மாநிலம் பிஜ்னோர் மாவட்டத்தில், ஒரு தம்பதியினரின் சண்டை பேசுபொருளாக மாறியது. இதனால், கடுமையான போலீஸ் நடவடிக்கை எடுக்கப்பட்டது. உத்தரபிரதேசத்தின்…