CINEMA
சிவாஜி பட ஷூட்டிங்கிற்கு தாமதமாக வந்த சரோஜாதேவி.. கோபத்தில் இயக்குனர் செய்த காரியம்..!!
நடிகர் திலகம் சிவாஜி கடந்த 1952-ஆம் ஆண்டு ரிலீசான பராசக்தி படத்தின் மூலம் திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். தனது நடிப்பு திறமையால் ரசிகர்களை தன்வசம் ஈர்த்தவர் சிவாஜி. சிவாஜி கணேசன் கே.சோமு இயக்கத்தில் உருவாக இருந்த ஜீவ பூமி திரைப்படத்தில் நடிக்க கமிட்டானார்.
இந்த படத்தில் சிவாஜிக்கு ஜோடியாக சரோஜாதேவி நடித்துள்ளார். படத்தின் ஷூட்டிங் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றுள்ளது. ஒரு நாள் சிவாஜிக்கு நேரம் தவறாமல் காலை 8 மணிக்கு சூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்து விட்டாராம். ஆனால் சரோஜாதேவி மதியம் ஒரு மணி வரை ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வரவே இல்லையாம்.
சரோஜா தேவி சரியான நேரத்திற்கு வரவில்லை. அவரிடம் இருந்து எந்த பதிலும் இல்லை. ஆனாலும் சிவாஜி கணேசன் கோபமோ அல்லது வேறு எந்த உணர்ச்சியுமே காட்டவில்லை. இந்த நிலையில் படத்தின் இயக்குனரான கே.சோமு அன்றைய நாள் ஷூட்டிங்கை ரத்து செய்துவிட்டு சரோஜாதேவி மீது இருந்த தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார். சிவாஜியிடம் சொல்லிவிட்டு இயக்குனர் ஷூட்டிங் ஸ்பாட்டை விட்டு கிளம்பிவிட்டார்.
இதனையடுத்து சோமு படத்தின் தயாரிப்பாளரிடம் சரோஜாதேவி ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வரவில்லை என்றால் என்னால் எப்படி படத்தை எடுக்க முடியும் என கூறியுள்ளார். அதன் பிறகு அந்த படத்தின் சூட்டிங் நடைபெறவே இல்லை. ஜீவ பூமி என்ற படத்தை ரசிகர்களால் பார்க்க முடியாமல் போனது. அதற்கு காரணம் சரோஜாதேவி தானாம். இந்த தகவலை சித்ரா லட்சுமணன் கூறியுள்ளார்.