நடிகை சமந்தா தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகரான நாகர்ஜுனாவின் மகன் நாகசைதன்யாவை கடந்த 2017 ஆம் வருடம் காதலித்து திருமணம் செய்து கொண்டார். நான்கு வருடம் ஒன்றாக வாழ்ந்த நிலையில் கடந்த 2021 ஆம் வருடம் விவகாரத்தை பெற்று பிரிந்து விட்டார்கள். அதன் பிறகு சோபிதாவை திருமணம் செய்து கொண்டார் நாக சைதன்யா. அதே நேரம் சமந்தா சிங்கிளாகவே இன்னமும் இருக்கிறார். பிட்னஸில் அதிக ஆர்வம் காட்டும் இவருக்கு ஏராளமான பட வாய்ப்புகளும், வெப் சீரிஸ்களும் குவிந்து வருகிறது.
இந்த நிலையில் நாகசைதன்யாவை பிரிந்த பிறகு சமந்தா ஜீவனாம்சமாக 200 கோடி ரூபாய் பெற்றதாக தகவல் பரவி வந்தது. இந்நிலையில் பிரபல இயக்குனர் கரன் ஜோகர் நடத்தும் காபி வித் கரன் என்ற நிகழ்ச்சியில் கரன்ஜோகர் இதுகுறித்து கேள்வி எழுப்புகிறார். அப்போது சமந்தா என்னது 200 கோடி ஜீவனாம்சம் வாங்கினேனா? அந்தத் தொகை என்னுடைய பேங்க் அக்கவுண்டில் எப்போது வரும் என்று ஒவ்வொரு நாளும் காத்திருக்கிறேன் என சிரித்துக்கொண்டே கூறினார். மேலும் நான் ஜீவனாம்சமாக ஒரு ரூபாய் கூட பெறவில்லை. இந்த தகவல் உண்மை இல்லை என்று கூறியிருக்கிறார்.
