பிரபல நடிகருடன் கோவிலுக்கு சென்ற நடிகை சமந்தா…. இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்…

பிரபல நடிகருடன் கோவிலுக்கு சென்ற நடிகை சமந்தா…. இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்…

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக கொடி கட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகை சமந்தா.

இவர் விண்ணைத்தாண்டி வருவாயா என்ற திரைப்படத்தில் தெலுங்கு ரீமேக் மூலம் நடிகையாக அறிமுகமானார்.

அதன் பிறகு தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் பல திரைப்படங்களில் நடித்து மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.

இவர் நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்ட நிலையில் கடந்த வருடம் இருவரும் விவாகரத்து செய்து பிரிவதாக அறிவித்தனர்.

விவாகரத்திற்கு பிறகு சமந்தா மயோசிடிஸ் சென்று அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டு சமீபத்தில் சிகிச்சை முடிந்து திரும்பினார்.

சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான யசோதா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன.

இந்நிலையில் தற்போது சமந்தா சரித்திர கதை அம்சம் கொண்ட படமாக உருவாகியுள்ள சாகுந்தலம் திரைப்படத்தில் நடித்துள்ளார்.

மலையாள நடிகர் தேவ் மோகன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த திரைப்படத்தை குணசேகர் இயக்கியுள்ளார்.

இந்த திரைப்படம் தமிழ் மட்டும் தெலுங்கு உள்ளிட்ட ஐந்து மொழிகளில் வருகின்ற ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாக உள்ளது.

இந்த திரைப்படத்தை பார்த்த சமந்தா படம் தொடர்பாக பகிர்ந்து இருந்தார்.

இந்நிலையில் சமந்தா உள்ளிட்ட படக்குழுவினர் ஹைதராபாத்தில் உள்ள ஸ்ரீ பேடம்மா தள்ளி கோவிலுக்கு சென்றுள்ளனர்.

அது தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரடாகி வருகிறது.

Archana