தமிழ் சினிமா இயக்குனர்கள் பலரும் பாலிவுட்டில் முன்னணி நடிகர்களை வைத்து படங்களை எடுத்தாலும் மிகப்பெரிய பாக்ஸ் ஆபீஸ் ஹிட் கொடுக்க முடியாமல் திணறி வருகிறார்கள். தெலுங்கில் ராம் சரணை வைத்து கேம் சேஞ்சர் படத்தை கொடுத்த இயக்குனர் சங்கரால் கூட ரசிகர்களை கவரும் வகையில் படத்தை எடுக்க முடியவில்லை. ஆனால் பாலிவுட்டுக்குச் சென்று ஷாருக்கான் வைத்து ஜவான் படத்தை இயக்கி சுமார் 1100 கோடி வசூல் சாதனையை அட்லீ அசால்ட் ஆக செய்தார். ராஜமவுலி, பிரசாந்த் நீல் மற்றும் சுகுமார் வரிசையில் இந்தியாவின் மோஸ்ட் வான்டெட் இயக்குனராக மாறியுள்ள அட்லி அடுத்ததாக அல்லு அர்ஜுனை வைத்து படமெடுக்க போவதாக தகவல் வெளியாகி உள்ளது.
புஷ்பா 2 படத்தின் வெற்றியை கூட சந்தோஷமாக கொண்டாட முடியாமல் சிறைச்சாலைக்கு அல்லு அர்ஜுன் சென்று வந்த நிலையில் அவரது குடும்பத்தினர் ஜோசியம் பார்த்ததாகவும் அதன் காரணமாக கூடிய விரைவில் அல்லு அர்ஜுன் தன்னுடைய பெயரில் மாற்றத்தை கொண்டு வரப் போவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அல்லு அர்ஜுனின் அடுத்த படத்தை அட்லீ இயக்கப் போவதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில் இந்தப் படத்தில் அல்லு அர்ஜுன் அண்ணன் மற்றும் தம்பி என இரட்டை கதாபாத்திரத்தில் நடிக்க போவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இப்படியான நிலையில் அட்லி மற்றும் அல்லு அர்ஜுன் கூட்டணியில் உருவாகும் இந்த திரைப்படத்திற்கு சாய் அபியங்கர் இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 2000 ஆம் ஆண்டுகளில் பிரபலமான பாடகர்களாக பலம் வந்தவர்கள் திப்பு மற்றும் ஹரி. இவர்களுடைய மகன் தான் சாய் அபியங்கர். இவர் ஆரம்பத்தில் ஆசை கூட மற்றும் கட்சி சேரா ஆகிய ஆல்பம் பாடல்களை பாடி இசையமைத்து ஓவர் நைட்டில் புகழ்பெற்றவர். அடுத்து மூன்றாவதாக இவர் சித்திரபுத்திரி என்ற பாடலையும் பாடி நடித்து இசை அமைத்திருந்தார். சமீபத்தில் வெளியான இந்த பாடலும் ரசிகர்களை கவர்ந்த நிலையில் பல பெரிய ஹீரோக்களின் படங்களுக்கு இசையமைக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்துள்ளது. அதன்படி தற்போது பான் இந்தியா ஸ்டார் அல்லு அர்ஜுன் படத்திற்கு இவர் இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது