‘ரோசு ரோசு ரோசு… அழகான ரோசு நீ!’…. பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய ஜனனியின் முதல் போட்டோ சூட் புகைப்படங்கள்!… வர்ணித்து உருகும் ரசிகர்கள்!…

‘ரோசு ரோசு ரோசு… அழகான ரோசு நீ!’…. பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய ஜனனியின் முதல் போட்டோ சூட் புகைப்படங்கள்!… வர்ணித்து உருகும் ரசிகர்கள்!…

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியை விட்டு வெளியேறி உள்ள ஜனனி தற்போது எடுத்துள்ள முதல் ஃபோட்டோ ஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி ஆனது தற்போது பரபரப்பாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டுள்ளது. இந்நிகழ்ச்சியை போன்று எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் இவ்வளவு ரசிகர்கள் கூட்டம் இருந்தது இல்லை. 21 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில்  தற்பொழுது 10 போட்டியாளர்களே எஞ்சியுள்ளனர். இறுதியாக பிக் பாஸ் வீட்டை விட்டு குறைந்த வாக்குகள் பெற்று இலங்கை போட்டியாளரான ஜனனி வெளியேற்றப்பட்டார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் முக்கிய போட்டியாளராக பார்க்கப்பட்டவர் ஜனனி. இவர் இலங்கையில் பிரபல மீடியா ஒன்றில் பணியாற்றிக் கொண்டிருந்தார்.. இதன் மூலம் கிடைத்த பிரபலம் காரணமாக பிக்  வீட்டிற்குள் நுழைந்தார்.

பிக் பாஸ் வீட்டுக்குள் சென்ற நாள் முதலில் இவருக்கு சமூக வலைத்தளங்களில் ஆர்மி தொடங்கப்பட்டு ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வந்தார். இந்நிலையில் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய ஜனனி முதலில் தனக்கு ஓட்டு போட்ட மக்களுக்கு நன்றி கூறி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை  வெளியிட்டார்.

இதை தொடர்ந்து அவர் தற்பொழுது முதல் ஃபோட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். அழகான பாவாடை தாவணியில் அவர் எடுத்த புகைப்படங்கள் தற்பொழுது அவரது ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது.

இதோ அந்த புகைப்படங்கள்…

Begam