தமிழ் சினிமா பிரபலங்களின் ரியல் குழந்தைகளை பார்த்துள்ளீர்களா?…. பலரும் பார்க்காத அழகிய புகைப்படங்கள்… - Tamizhanmedia.net
Connect with us

Tamizhanmedia.net

தமிழ் சினிமா பிரபலங்களின் ரியல் குழந்தைகளை பார்த்துள்ளீர்களா?…. பலரும் பார்க்காத அழகிய புகைப்படங்கள்…

CINEMA

தமிழ் சினிமா பிரபலங்களின் ரியல் குழந்தைகளை பார்த்துள்ளீர்களா?…. பலரும் பார்க்காத அழகிய புகைப்படங்கள்…

பொதுவாக சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருக்கும் விஜய் மற்றும் அஜித் உள்ளிட்ட பல நடிகர்களின் குழந்தைகள் புகைப்படங்கள் எளிதாக இணையத்தில் வெளியாகி விடுகின்றன. அது மட்டுமல்லாமல் அவர்களின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் கூட இணையத்தில் அடிக்கடி வைரலாகி வருகிறது. ஆனால் இவர்களைத் தவிர சில பிரபலங்களின் குழந்தைகளை பலரும் பார்த்திடாத புகைப்படத் தொகுப்பு இந்த பதிவில் பார்க்கலாம்.

நடிகர் பரத்:

சினிமாவில் ஒரு சில திரைப்படங்கள் நடித்திருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் தான் நடிகர் பரத். இவர் ஜெஸ்லி என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு இரட்டை குழந்தைகள் உள்ளனர்.

நடிகை சந்தியா:

பரத் நடிப்பில் வெளியான காதல் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர்தான் சந்தியா. இவர் தற்போது திருமண மற்றும் குழந்தை என செட்டிலாகி விட்டார். இவருக்கு திருமணம் ஆகி ஒரு பெண் குழந்தை உள்ளது.

நடிகர் பாபி சிம்ஹா – ரேஷ்மி மேனன்:

சினிமாவில் முன்னணி நடிகராக திகழும் பாபி சிம்ஹா தன்னுடன் இணைந்து நடித்த ரேஷ்மி மேனன் என்பவரை சில வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.

நடிகை தேவயானி:

வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை என இரண்டிலும் கலக்கிக் கொண்டிருக்கும் நடிகை தான் தேவயானி. குறிப்பாக இவரின் கோலங்கள் சீரியலை இன்றும் யாராலும் மறக்க முடியாது. இவர் இயக்குனர் ராஜ்குமாரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

நடிகை அசின்:

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்த அசின் தற்போது திருமண மற்றும் குழந்தை என செட்டி லாக்கி விட்டார். திருமணத்திற்குப் பிறகு சினிமா பக்கம் தலை காட்டாத இவருக்கு ஒரு மகன் உள்ளார்.

நடிகை திவ்யா உன்னி:

தமிழ் சினிமாவில் வேதம்,பாளையத்தம்மன் மற்றும் சபாஷ் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்த ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் திவ்யா உன்னி. இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் கணவர் டாக்டர் சுதீரிடமிருந்தே விவாகரத்து பெற்ற நிலையில் அதன் பிறகு அருண்குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு தற்போது மூன்று குழந்தைகள் உள்ளனர்.

நடிகர் விஜய் ஆண்டனி:

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் தான் விஜய் ஆண்டனி. இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான பிச்சைக்காரன் 2 திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. 2006 ஆம் ஆண்டு பாத்திமா என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு அழகிய ஒரு மகளும் உள்ளார்.

நடிகை சரண்யா மோகன்:

சினிமாவில் குறைந்த திரைப்படங்களில் நடித்தாலும் தமிழ் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் தான் நடிகை சரண்யா மோகன். இவர் பல் மருத்துவர் அரவிந்த் கிருஷ்ணன் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன.

நடிகர் ஜீவா:

குறைந்த திரைப்படங்களில் நடித்திருந்தாலும் தமிழ் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்த நடிகர் தான் ஜீவா. இவருக்கு சமீபத்தில் பட வாய்ப்புகள் குறைந்த நிலையில் ஒரு சில திரைப்படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். இவர் 2007 ஆம் ஆண்டு சுகப்பிரியா என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு ஒரு மகனும் உள்ளார்.

Continue Reading
Advertisement hello world
You may also like...

More in CINEMA

To Top