“என் பக்கத்துல நெருங்கி உட்காருங்க…” வேகமாகக் சென்றதைக் கேட்டதற்கு மட்டமான பதில்… ராபிடோ பைக்கில் பெண் பயணியிடம் அத்துமீறிய ஓட்டுநர்… பகீர் சம்பவம்…!!

By Devi Ramu on கார்த்திகை 5, 2026

Spread the love

பெங்களூரில் ராபிடோ பைக் டாக்ஸியில் பயணம் செய்த பெண் ஒருவரிடம், ஓட்டுநர் தொடர்ந்து தன்னை நெருங்கி உட்காரச் சொல்லி வற்புறுத்தியதுடன், அசெளகரியமான சூழ்நிலையை ஏற்படுத்திய சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரில் ஆட்டோ கிடைக்காத காரணத்தினால் ஒயிட்ஃபீல்டு பகுதிக்குச் செல்வதற்காக ராபிடோ மூலம் பைக் டாக்சியை முன்பதிவு செய்துள்ளார் பெண் ஒருவர். பயணம் தொடங்கியதிலிருந்து அந்த ஓட்டுநர் தன்னிடம் தொடர்ந்து “சிறிது முன்னோக்கி நகர்ந்து நெருங்கி உட்காருங்கள்” என்று மூன்று முறை கூறியுள்ளார். ஏற்கனவே பாயின் உயரம் அதிகமாக இருந்ததாலும், இருக்கையில் இடமில்லாததாலும் அவர் அப்படிச் சொன்னது அப்பெண்ணுக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

   

மேலும், ஓட்டுநர் பைக்கை மிக வேகமாக ஓட்டியதால் பயந்துபோன அப்பெண் வாகனத்தின் வேகத்தைக் குறைக்கக் கோரியுள்ளார். அதற்கு அந்த ஓட்டுநர், “பைக்கின் பின்னால் இருக்கும் கம்பியை பிடித்துக்கொள், அதுதான் உனக்கு நலம்” என்று மட்டமான முறையில் பதிலளித்துள்ளார்.

   

இந்த 30 நிமிடப் பயணம் தனக்கு மிகுந்த மன உளைச்சலைத் தந்ததாகக் குறிப்பிட்ட அப்பெண், தனது எக்ஸ் மற்றும் லிங்க்ட்இன் பக்கத்தில் பகிரப்பட்ட இந்தப் பதிவின் மூலம் பெண்களின் பாதுகாப்பு குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளார். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து ராபிடோ நிறுவனம் உரிய விவரங்களைக் கேட்டுப் புகார் பதிவு செய்யுமாறு கோரியுள்ளதுடன், நெட்டிசன்கள் இதற்குத் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.