கண் கலங்கி அழுத ரக்ஷிதா!… ‘உனக்கு நான் எனக்கு நீ மட்டும் தான்’…. என்ன நடந்தது?… சோகமான ப்ரோமோ இதோ!…

கண் கலங்கி அழுத ரக்ஷிதா!… ‘உனக்கு நான் எனக்கு நீ மட்டும் தான்’…. என்ன நடந்தது?… சோகமான ப்ரோமோ இதோ!…

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் இன்றைய நாளின் மூன்றாவது ப்ரோமோ தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது.

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி ஆனது பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டுள்ளது. ஒவ்வொரு வாரமும் பிக் பாஸ் வீட்டில் பலவிதமான டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு டாஸ்கிலும் போட்டியாளர்கள் தங்களது திறமையை நிரூபித்து சிறப்பாக விளையாடி வருகின்றனர்.

இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் இருந்து இறுதியாக ஜனனி குறைந்த வாக்குகள் பெற்று வெளியேறி உள்ளார். இந்த வாரம் பிக் பாஸ் வீடு ‘கனா காணும் காலங்கள்’ என்ற தலைப்பில் பள்ளிக்கூடமாக மாற்றப்பட்டுள்ளது. நேற்று ஆரம்ப பள்ளியாக இருந்த பிக் பாஸ் வீடு இன்று மேல்நிலைப் பள்ளியாக மாறி உள்ளது.

இதில் போட்டியாளர்கள் தங்களது சொந்தக் கதைகளை கூறி அழுது வருகின்றனர். இந்நிலையில் இன்றைய நாளின் முதலாவது மற்றும் இரண்டாவது ப்ரோமோவில் போட்டியாளர்கள் தங்களுக்கு பிடித்தவர்களுக்கு கடிதம் எழுதினர். தற்பொழுது இன்றைய நாளின் மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

இதில் ரக்ஷிதா தனக்கு பிடித்த அம்மாவிற்கு கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, அந்த கடவுள்கிட்ட கேட்டுக்கிறது ஒன்னே ஒன்னு தான். எனக்கு இதுக்கு இப்புறம் என் வாழ்க்கையில் என்ன நடக்கும் என்று எனக்கே தெரியாது. குழந்தையோட அமைப்பு இருக்குதான்னு எனக்கு தெரியாது. என் அம்மா தான் எனக்கு குழந்தை. அந்தக் குழந்தையை கடைசி வரைக்கும் எனக்கு குடுக்கணும்.

அந்தக் குழந்தையை நான் நல்ல படியாக பார்த்துக்கொள்ளனும். இதுக்குப்புறம் உனக்கு நான் எனக்கு நீ என்று வாழ்றதிற்கு ரெடியாக இருக்கிறேன் அம்மா’ என்று கூறி கண்கலங்கி அழுகிறார் ரக்ஷிதா. இந்த வீடியோ தற்பொழுது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதோ அந்த ப்ரோமோ வீடியோ….

Begam