6 வருஷமா சென்னையில் டீக்கடை நடத்தும் ரஜினி பட அம்மா நடிகை.. யாருன்னு தெரிஞ்சா நீங்களே ஷாக் ஆயிடுவீங்க..!

By Nanthini on அக்டோபர் 15, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக கலக்கிக் கொண்டிருப்பவர் தான் நடிகர் ரஜினி. இவரும் பிரபுவும் சேர்ந்து குரு சிஷ்யன் திரைப்படத்தில் ஒன்றாக நடித்திருந்தனர். இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. அதனைத் தொடர்ந்து இருவரும் சந்திரமுகி திரைப்படத்தில் ஒன்றாக நடித்த நிலையில் அந்த படமும் சூப்பர் ஹிட் கொடுத்தது. பாண்டியனும் இந்த திரைப்படத்தில் குணச்சித்திர வேடத்தில் நடித்திருப்பார். குரு சிஷ்யன் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக கௌதமியும், பிரபுவுக்கு ஜோடியாக சீதாவும் நடித்திருந்தனர். மேலும் சோ, ஆச்சி மனோரமா மற்றும் வினு சக்கரவர்த்தி என பிரபலங்கள் பலரும் இப்படத்தில் நடித்திருந்தனர். எஸ் பி முத்துராமன் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படத்திற்கு இளையராஜா இசை அமைத்த அனைத்து பாடல்களுமே சூப்பர் ஹிட்.

   

ஜிங்கிடி ஜிங்கிடி, நாற்காலிக்கு சண்டை, வா வா வஞ்சி மலரே ஆகிய பாடல்கள் அனைத்தும் ரசிகர்களை வெகுவாக கவர்னர். இந்த திரைப்படத்தில் ரஜினியின் அப்பாவாக செந்தாமரை என்பவர் நடித்திருந்தார். அதனைப் போலவே அம்மாவாக பத்மஸ்ரீ என்பவர் நடித்திருந்தார். இந்நிலையில் ரஜினியுடன் நடித்த பத்மஸ்ரீ அவர்கள் தற்போது சென்னையில் ஒரு டீக்கடை வைத்து நடத்தி வருகின்றார். அதுவும் ஆறு வருடமாக டீக்கடை நடத்தி வருவதாக கூறுகிறார்.

   

 

இது பற்றி அவரே கூறும் போது, இந்த வயதிலும் அப்படி ஒரு வைராக்கியம், உழைப்பின் மேல் ஒரு ஆர்வம், சோம்பேறி மாதிரி உட்காராம பாரதி கண்ட புதுமைப் பெண்ணாய் உடலில் திடமுள்ளவரை உழைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அவர் டீக்கடை நடத்தி வரும் நிலையில் அவருடைய செயல் பலரின் பாராட்டுகளையும் பெற்று வருகிறது. மேலும் முன்னாள் நடிகை டீக்கடை நடத்துவதால் ஏதோ சாப்பாட்டுக்கு வழியில்லாமல் கஷ்டப்படுறேன்னு நீங்க நினைக்காதீங்க, கடவுளின் அருளால் என்னிடம் எல்லா வசதிகளும் உள்ளது. வீட்டில் சும்மா இருக்க பிடிக்காம தான் டீக்கடை நடத்துகிறேன் என்று அவர் கூறியுள்ளார்.