3 நாட்களுக்கு எந்த ஏடிஎம்மிலும் சார்ஜ் கிடையாது…. பொதுத்துறை வங்கிகளின் சூப்பர் அறிவிப்பு…. பொதுமக்களுக்கு குட் நியூஸ்….!

By Nanthini on புரட்டாதி 27, 2026

Spread the love

வங்கி ஊழியர்களின் மூன்று நாள் வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக வங்கிச் சேவைகள் பாதிக்கப்படும் சூழ்நிலையில், வாடிக்கையாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு பொதுத்துறை வங்கிகள் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளன. அனைத்து சனிக்கிழமைகளிலும் விடுமுறை அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, செப்டம்பர் 28 முதல் 30 வரை மூன்று நாட்களுக்கு வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். இதனால் நேரிடையாக வங்கிகளுக்குச் சென்று மேற்கொள்ளும் டெபாசிட் செய்தல், பணம் எடுத்தல் மற்றும் காசோலை (Cheque) பரிவர்த்தனைகள் போன்ற வழக்கமான பணிகள் கடுமையாகப் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் சிரமத்தைக் குறைக்கும் வகையில், இக்காலகட்டத்தில் இணையதள வங்கிச் சேவை, ஏ.டி.எம். (ATM) மற்றும் டிஜிட்டல் வழிப் பரிவர்த்தனைகளைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், இந்த மூன்று நாட்களிலும் எந்தவொரு வங்கியின் ஏ.டி.எம். மையத்திலும் கூடுதல் கட்டணமின்றித் தடையில்லாமல் பணம் எடுத்துக்கொள்ளலாம் என்றும், வழக்கமான மாதாந்திர இலவசப் பரிவர்த்தனை வரம்புகள் இதற்குக் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தொழில் நிறுவனங்கள், வர்த்தகர்கள் மற்றும் சிறு வியாபாரிகள் தங்களின் அவசியமான ரொக்கத் தேவைகளுக்கு ஏ.டி.எம். சேவைகளைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு பொதுத்துறை வங்கிகள் கேட்டுக் கொண்டுள்ளன.