“தலைவருக்கே டஃப் கொடுப்பார் போல…” தவெக ஆதவ் அர்ஜூனாவின் 442 கோடி சொத்து விவரம் இதோ…!!

By Devi Ramu on பங்குனி 31, 2026

Spread the love

தமிழக சட்டமன்றத் தேர்தலில் வில்லிவாக்கம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பாகப் போட்டியிடும் ஆதவ் அர்ஜூனா, தனது வேட்புமனுவில் மலைக்கவைக்கும் சொத்து விவரங்களைத் தாக்கல் செய்துள்ளார். இவருக்கும் இவரது மனைவிக்கும் சேர்த்து மொத்தம் 442 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் வியப்பிற்குரிய விஷயம் என்னவென்றால், இவ்வளவு பெரிய கோடீஸ்வரரான இவர்களுக்குச் சொந்தமாக ஒரு சென்ட் விவசாய நிலம் கூடக் கிடையாது. இருப்பினும், வணிக ரீதியிலான கட்டிடங்கள் மற்றும் அசையும் சொத்துக்களாகவே பெரும் பகுதி முதலீடு செய்யப்பட்டுள்ளதாகப் பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தங்கம் மற்றும் வாகனங்கள் மீதான இவர்களின் ஆர்வம் சொத்து விவரங்களில் அப்பட்டமாகத் தெரிகிறது. ஆதவ் அர்ஜூனா மற்றும் அவரது மனைவி டெய்ஸியிடம் சுமார் 490 சவரன் தங்க நகைகளும், பெருமளவு வெள்ளிப் பொருட்களும் உள்ளன. வாகனங்களைப் பொறுத்தவரை, இன்னோவா கார் முதல் ராயல் என்ஃபீல்ட் பைக் மற்றும் விளையாட்டு மிதிவண்டி வரை இவர்களது பட்டியலில் இடம்பெற்றுள்ளன. தவெக தலைவர் விஜய்யின் சொத்து மதிப்பு 537 கோடி ரூபாயாக உள்ள நிலையில், அக்கட்சியின் முக்கிய நிர்வாகியான ஆதவ் அர்ஜூனாவும் அவருக்கு இணையான பெரும் செல்வந்தராக வலம் வருவது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.