நடிகர் விஜயும் அஜித்தும் இணைந்து நடித்த படம் ராஜாவின் பார்வையிலே. இந்த படம் 1995-ஆம் ஆண்டு ரிலீஸ் ஆனது. இதனை ஜானகி சௌந்தர் இயக்கினார். ஸ்ரீ மாசாணி அம்மன் மூவிஸ் சௌந்தர பாண்டியன் தயாரித்தார்.
இந்த நிலையில் தயாரிப்பாளர் சௌந்தர பாண்டியன் சித்ரா வெங்கட்ராமனுடன் அளித்த பேட்டியில் கூறியதாவது, நடிகர் விஜய், சூர்யா, தனுஷ், அஜித் ஆகியோர் பிரபல தெலுங்கு தயாரிப்பு நிறுவனங்களுக்கு படம் நடித்துக் கொடுக்கின்றனர். இதனால் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சிக்கலில் உள்ளனர்.
நடிகர் சிம்பு, டி.ராஜேந்திரன் ஆகியோருக்கும் சில தயாரிப்பாளர்களுக்கும் இடையேயான மோதல் குறித்து பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. விரைவில் அந்த பிரச்சனை சரியாகிவிடும். தளபதி விஜய் தனது 69-ஆவது படத்துடன் சினிமாவில் இருந்து விலகி அரசியலில் ஈடுபட போவதாக அறிவித்தார்.
எனக்கு தெரிந்து விஜயின் இடத்தை நிரப்பும் தகுதி சிம்புவுக்கு இருக்கிறது என்று தான் சொல்லுவேன். ஒரு படம் ரிலீஸ் ஆகிறது என்றால் நான் வெளியூரில் சுமார் 150 தியேட்டர்கள் வரைக்கும் சென்று பார்த்திருக்கிறேன் அப்போது சிம்பு படத்திற்கு ஏராளமான ரசிகர்கள் இருப்பதை கவனித்திருக்கிறேன் என கூறியுள்ளார். மேலும் விஜய், அஜித் ஆகியோரின் நட்பு குறித்தும் சௌந்தர பாண்டியன் விரிவாக அந்த பேட்டியில் கூறியுள்ளார்.