கல்யாண குஷியில் தம்பி ராமையா மகன் உமாபதி.. மந்திரத்தில் தொங்கிய ‘பித்தல மாத்தி’.. தனியாலாக தவிர்த்த தயாரிப்பாளர்..!

By Mahalakshmi on ஜூன் 16, 2024

Spread the love

புது மாப்பிள்ளையான உமாபதி ராமையா நடிப்பில் உருவாகி இருக்கும் பித்தல மாத்தி என்ற திரைப்படத்தை பார்ப்பதற்கு யாரும் வராத காரணத்தினால் திரையரங்கு உரிமையாளர்கள் அப்பாடத்தை திரையரங்கில் இருந்து எடுத்து இருக்கிறார்கள். இதனால் தயாரிப்பாளர் அவரிடம் சண்டை போட்ட சம்பவம் பெரும அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அறிமுகம் இயக்குனர் மானிக் வித்யா இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் தான் பித்தல மாத்தி. இந்த திரைப்படத்தில் உமாபதி ராமையா கதாநாயகனாக நடிக்கின்றார். பாலசரவணன் , வினிதா லால்,  தம்பி ராமையா, தேவதர்ஷினி, ஆடுகளம், நரேன், காதல் சுகுமார், முல்லை, கோதண்டம் உள்ளிட்ட பலப் பிரபலங்கள் நடித்திருக்கிறார்கள். எஸ்என் வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு மோசஸ் இசையமைத்திருக்கிறார்.

   

   

இந்த திரைப்படத்தை ஸ்ரீ சரவணா பிலிம் ஆர்ட்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் ஜி சரவணன் இப்படத்தை தயாரித்திருந்தார். 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் வெளியான தண்ணி வண்டி என்ற திரைப்படத்திற்கு குறைவான திரையரங்குகளை ஒதுக்கப்பட்ட காரணத்தினால் அந்த படத்தில் இருக்கும் சில காட்சிகளை மாற்றி அமைத்து மீண்டும் பித்தள மாத்தி என பெயர் மாற்றம் செய்து அதிக திரையரங்குகளில் வெளியிடுவதற்கு முடிவு செய்து இருந்தார் தயாரிப்பாளர் சரவணன்.

 

இதற்கிடையில் நடிகரான உமாபதி ராமையா அர்ஜுனனின் மகள் ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் தொடர்பான புகைப்படங்கள் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. புது மாப்பிள்ளை என்பதால் படு பிஸியாக இருந்து வரும் இவரின் திரைப்படத்திற்கு ஒரு ஆள் கூட வரவில்லை. சென்னை சாலிகிராமத்தில் இருக்கும் கருமாரியம்மன் திரையரங்குகளில் இந்த திரைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார்கள்.

ஆனால் 50 டிக்கெட் கூடாத விற்பனை ஆகாத காரணத்தினால் அந்த திரையரங்கின் உரிமையாளர் அப்பாடத்தை அங்கிருந்து தூக்கி விட்டார். இதை கேள்விப்பட்ட தயாரிப்பாளர் சரவணன் அங்கு சென்று விசாரித்த போது படத்திற்கு எந்தவித ப்ரோமோஷனும் செய்யவில்லை, ஒரு பேனர் கூட வைக்கவில்லை அப்படி இருக்கையில் யார் படம் பார்க்க வருவார்கள் என்று கேட்டிருக்கிறார்கள்.

இதற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சரவணன் கூறியதாவது அந்த திரைப்படத்தில் நடித்திருந்த சிறுசிறு நடிகர்கள் கூட ஒரு வீடியோ வெளியிட்டு இது போன்ற திரைப்படம் வெளியாக உள்ளது என கூறியிருக்கிறார். ஆனால் இப்படத்தில் பல லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கிய உமாபதி நேரில் வர வேண்டாம்.

தற்போது அவர் திருமண குஷியில் பிஸியாக இருக்கின்றார். அட்லீஸ்ட் ஒரு வீடியோ வெளியிட்டு தன்னுடைய படம் ரிலீஸ் ஆக உள்ளது. அனைவரும் சென்று பாருங்கள் என்றாவது ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கலாம். அதைக்கூட அவர் செய்யவில்லை என தனது ஆதங்கத்தை கொட்டி தீர்த்து இருக்கின்றார் தயாரிப்பாளர் சரவணன்.