அந்த ஒரு படத்தில் நடிக்க 4 மடங்கு அதிக சம்பளம் கேட்ட விஜயகாந்த்.. பல வருட சீக்கிரட்டை பகிர்ந்த தயாரிப்பாளர் கலைப்புலி தாணு..!

By Nanthini on ஜனவரி 8, 2025

Spread the love

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு நடிகர் என்றால் அது விஜயகாந்த் தான். தன்னுடைய நடிப்பால் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் தன் வசம் கட்டி போட்டவர். அரசியல் கட்சி தலைவர்களால் கேப்டன் என்று அழைக்கப்பட்ட விஜயகாந்த் அந்த அளவிற்கு தலைமை பண்பு படைத்தவராக விளங்கினார். சினிமாவிலும் அவருடைய அந்த தலைமை பண்பு பல திரைப்படங்களில் வெளிப்பட்டது. அதற்கு கேப்டன் பிரபாகரன் மற்றும் சின்ன கவுண்டர் போன்ற திரைப்படங்கள் நல்ல உதாரணமாகும். திரை உலகில் கால் பதித்த விஜயகாந்த்திற்கு ஆரம்ப காலகட்டங்கள் கடும் சோதனையாக தான் இருந்தன.

   

ஆனால் தன்னுடைய கடுமையான உழைப்பால் அதெல்லாம் தாண்டி முன்னுக்கு வந்த விஜயகாந்த் முன்னணி நடிகர்களான கமல் மற்றும் ரஜினி ஆகியோருக்கு இணையாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டார்.  அவருடைய திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் வரவேற்கப்பட்டன. இப்படி தமிழ் சினிமாவின் புகழின் உச்சத்திற்கு இருந்த விஜயகாந்த் ஒரு கட்டத்தில் அரசியலில் நுழைந்து கலக்கினார். பிறகு உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டிருந்த இவர் கடந்த வருடம் உயிரிழந்தார்.

   

 

இவருடைய மரணம் ஒட்டுமொத்த தமிழ் சினிமா உலகிற்கு பேரிழப்பு என்று கூறலாம். இவர் இந்த மண்ணுலகை விட்டு மறைந்தாலும் என்றும் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்.  இந்நிலையில் விஜயகாந்த் குறித்து சமீபத்தில் அளித்த பேட்டியில் பேசிய தயாரிப்பாளர் கலைபுலி தாணு, நான் முதலில் யார் படத்தில் நடிக்க விஜயகாந்த்திடம் பேச சென்றிருந்தேன்.  அப்போது அவர் மற்றொரு திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்ததால் என்னால் நடிக்க முடியாது வேறொரு படம் வரும்போது நான் நடித்து தருகிறேன் என கூறிவிட்டார்.

அதன் பிறகு ஒரு படத்தின் கதையை எடுத்துக் கொண்டே விஜயகாந்தை வைத்து தயாரிக்க வேண்டும் என்று கூறி அவரிடம் சென்ற போது அவருடைய நண்பர் ராவுத்தரை சந்தித்து கதையை சொல்ல கூறினார். நான் அதிக சம்பளம் சொன்னால் ஓடி விடுவேன் என்று நினைத்து அப்போதே விஜயகாந்த் வாங்கும் சம்பளத்தை விட நான்கு மடங்கு சம்பளம் அதிகமாக கேட்டார். அவர் கேட்டதற்கு நானும் உடனே சம்மதம் சொல்லிவிட்டேன். அட்வான்ஸ் எப்போது வேண்டும் என்று நான் கேட்டதும் அவங்களே ஆடிப் போயிட்டாங்க. ஆனா விஜயகாந்துக்கு கொடுத்த சம்பளத்தை ஒரே ஏரியாவுல வித்து சம்பாதித்து காட்டுன. அப்படி உருவான திரைப்படம் தான் கூலிக்காரன் என்று கலைப்புலி எஸ் தாணு கூறியுள்ளார்.