பாலா, மிஷ்கின் என்ன படம் எடுக்குறாங்கன்னு அவங்களுக்கே தெரியாது.. ஷங்கர் அதுக்கும் மேல.. பிரபல தயாரிப்பாளர் தாக்கு..!

By Nanthini on ஆனி 12, 2025

Spread the love

தமிழ் சினிமாவை பொருத்தவரையில் நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு இடையேயான உரையாடல்களையும் படத்தை தயாரிப்பதில் இருக்கும் சிக்கல்களையும் தயாரிப்பாளர் பாலாஜி பிரபு வெளிப்படையாக பேசி வருகின்றார். அதன்படி இயக்குனர்களை பாலா விமர்சித்துள்ள ஒரு வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. காதல் ரோஜாவே மற்றும் நிலா போன்ற படங்களில் தயாரிப்பாளராக பணியாற்றியவர் தான் பாலாஜி பிரபு. இவர் தயாரித்த திரைப்படங்கள் எதுவும் பெரிதாக வெற்றி பெறவில்லை.

எல்லா திரைப்படங்களையும் விமர்சனம் பண்ண முடியாது ? நேர்காணலில் மனம் திறந்த பாலாஜி  பிரபு...! | Tamil Cinema News

   

சமீப காலமாக தமிழ் நடிகர்கள் வெளி மாநிலங்களில் படப்பிடிப்பு நடத்துவதால் தமிழகத்தில் உள்ள தொழிலாளர்கள் பாதிக்கப்படுவதாகவும் முன்னணி நடிகர்களும் ஆரம்பத்தில் தமிழ் தயாரிப்பாளர்களுடன் பணியாற்றிய பிறகு வெளி மாநில தயாரிப்பாளர்களுடன் இணைவதையும், நடிகைகளுக்கு பணத்தின் மீது இருக்கும் ஆசை என சர்ச்சைக்குரிய விதமாக பேட்டியளித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், இயக்குனர் பாலாவும் மிஸ்கினும் என்ன படம் எடுக்குறாங்க என்று அவங்களுக்கே தெரியாது.

   

பாலா அழுது அன்றுதான் பார்த்தேன்.. அவரை நேசிக்க வேண்டும்.. மிஷ்கின் உருக்கம்  | Mysskin Emotional Speech at Bala 25 - Tamil Filmibeat

 

மிஸ்கின் படத்துல சுடுகாட்டில் நாய் ஊளையிடும், பாலா படத்துல ஹீரோ எவ்வளவு அழகா இருந்தாலும் அவருக்கு மொட்டை அடிச்சு, முடிய கட் பண்ணி, காத கட்டிவிட்டு, சிரிக்கும் போது பல்லு அழகா இருந்தா பல்லுக்கு கருப்பு கலர் அடிக்கச் சொல்லி ஹீரோவா அவ்வளவு அசிங்கமா காட்டுவாரு. பாலா இயக்கிய வனங்கான் படத்தில் அருண் விஜய் ஒரு மாற்றுத்திறனாளியாக காட்டப்பட்டிருந்தார். சும்மாவே அவர பாக்க முடியாது. இதுல காது கேட்காது வாய் பேச முடியாது என அருண் விஜயின் முகத்தை நாரடிச்சுட்டாரு.

இயக்குநர் ஷங்கர் பிறந்த நாள்: திரையுலக பிரபலங்கள் வாழ்த்து | shankar  birthday - hindutamil.in

அந்த படத்தில் கண்கள் தெரியாத பெண்கள் குளிக்கும் போது ஒளிந்திருந்து பார்க்கும் காட்சிகளை எல்லாம் எதுக்கு அவ்வளவு ஆபாசமாக எடுக்கணும். எல்லா இயக்குனர்களும் இப்படி எதையாவது செய்துதான் படத்தை ஹிட் ஆக வேண்டும் என முடிவு செய்து விட்டார்கள். அதனைப் போலவே சங்கரை பிரம்மாண்டம் என்று சொல்லி சொல்லியே இந்த இடத்துக்கு கொண்டு வந்துட்டாங்க. அவர் எடுக்கிற படத்துல ஒண்ணுமே இல்ல. பிரம்மாண்டம் என்று சொல்லியே பணத்த ஷங்கர் வீணடிச்சிட்டு இருக்காரு என்று இயக்குனர்களை தயாரிப்பாளர் பாலாஜி பிரபு கடுமையாக தாக்கி பேசியுள்ளார்.