‘வேற லெவல்ல டான்ஸ் ஆடறீங்களே பிரியங்கா’… ‘சூப்பர் சிங்கர்’ செட்டில் பிரியங்காவின் சேட்டைகள்… வைரலாகும் வீடியோ…

By Begam

Published on:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சூப்பர் ஹிட் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று ‘சூப்பர் சிங்கர்’.  இந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி ஆனது மக்களிடம் பேராதரவை பெற்று பல சீசன் களை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. தற்பொழுது ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வரும் நிலையில் இந்த சீசனும் நிறைவு கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிகழ்ச்சியின் பிரபல ஆங்கர்களாக பிரியங்கா மற்றும் மாகாபா இருவரும் வருகின்றனர்.

   

இவர்கள் இருவரும் இந்த செட்டில் செய்யும் சேட்டைகளுக்கு அளவே இல்லை என்று கூறலாம். இந்த சூப்பர் சிங்கர் சீசன் 9 பிரபலமாக டிஜே பிளாக் மற்றும் பூஜா இருவரும் வலம் வந்து கொண்டுள்ளனர். சூப்பர் சிங்கர் 9 என்று சொன்னாலே இவர்களது முகம் தான் அனைவருக்கும் தற்போது ஞாபகம் வந்து கொண்டிருக்கும்.

பல்வேறு இசை கலைஞர்களை உருவாக்கி வெள்ளி திரைக்கு தந்த பெருமை இந்த செட்டுக்கு உண்டு என்று கூறலாம். இந்நிகழ்ச்சியில் இருந்து வந்த பலர் தற்பொழுது வெள்ளித் துறையில் பிரபலங்களாக ஜொலித்து வருகின்றனர். சாமானிய மக்களாக இருந்தவர்களை பிரபலங்களாக மாற்றி இருக்கிறது விஜய் டிவி.

தற்பொழுது சூப்பர் சிங்கர் 9 இறுதிக்கட்டத்தை எட்டி வரும் நிலையில் டைட்டிலை வெல்லப்போவது யார் என்று அறிய ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். தற்பொழுது பிரியங்கா சூப்பர் சிங்கர் சீசன் செட்டில் வேற லெவலில் டான்ஸ் ஆடியோ வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை டிஜே பிளாக் எடுத்துள்ளார். தற்பொழுது இந்த வீடியோ ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது…