திருமணம் ஆகி ஒரு வருஷம் கூட ஆகல அதுக்குள்ள விவாகரத்தா..? கணவரை பிரியும் ரோஜா சீரியல் நடிகை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..

By Ranjith Kumar

Updated on:

பிரபல தனியார் தொலைக்காட்சியான சன் டிவியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற தொடர்களில் ஒன்று தான் ரோஜா என்ற சீரியல் மூலமாக ஹீரோயினாக நடித்து பேமஸ் ஆனவர்  ப்ரியங்கா நல்காரி . இந்த சீரியலின் மூலம் இவரும் ஏராளமான ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர். ரோஜா சீரியல் கடந்த ஆண்டு முடிவடைந்த நிலையில், அதை தொடர்ந்து ஜீ தமிழில் ஒளிபரப்பான சீதா ராமன் என்கிற சீரியலில் நடிக்க தொடங்கினார்.

இந்த சீரியலில் இருந்தும் பாதியிலேயே வெளியேறியி காதலனுடன் கோவிலில் ரகசிய திருமணம் செய்துகொண்ட பிரியங்கா, அதுகுறித்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு தனது திருமண அறிவிப்பை திடீரென வெளியிட்டார். அவர் மலேசியாவிலேயே செட்டில் ஆனதால் அவர் இனி சீரியலில் நடிக்க மாட்டார் என்றும் கூறப்பட்டது.ஆனால் அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் நள தமயந்தி என்கிற சீரியலின் மூலம் மீண்டும் வந்து இணைந்தார். சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருக்கும் பிரியங்கா, தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து அவர் தனது கணவரின் புகைப்படங்கள் அனைத்தையும் நீக்கியதும் சந்தேகத்தை எழுப்பியதை தொடர்ந்து ரசிகர்கள் கேட்டுக் கொண்டே இருந்தார்கள்,

   

இந்த நிலையில், சமூக வலைதளம் வாயிலாக நெட்டிசன்களுடன் கலந்துரையாடிய பிரியங்காவிடம் ஒருவர் நீங்கள் சிங்கிளா என கேள்வி எழுப்பினார். இதற்கு அவர் ஆமாம் என பதிலளித்ததால் அவர் கணவரை பிரிந்து வாழ்ந்து வருவது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ஆனால் என்ன காரணத்திற்காக அவர் கணவரை பிரிந்தார் என்பது இதுவரை தெரியவில்லை. திருமணம் ஆன ஒரே வருஷத்தில் பிரியங்கா நல்காரி கணவரை பிரிந்துள்ளது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது

author avatar
Ranjith Kumar