காதல் மற்றும் திரில்லர் திரைப்படமான அஞ்சாதே கடந்த 2008-ஆம் ஆண்டு ரிலீஸ் ஆனது இந்த படத்தை மிஸ்கின் இயக்கினார். பிரசன்னா, நரேன், லட்சுமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர். இந்த திரைப்படத்திற்கு சுந்தர் சி பாபு இசையமைத்தார். போலீஸ் வேலையே லட்சியம் என வாழும் ஒருவன், பொறுக்கி தனமாக ஊர் சுற்றும் ஒருவன் என இரு நண்பர்களின் வாழ்க்கை பாதையை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்த திரைப்படத்தில் நரேன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நடிகர் பிரசன்னா அதிகம் பேசாத வில்லனாகவும், பாண்டியராஜன் பிரசன்னாவுக்கு துணை நிற்கும் லோகு என்ற கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். இந்த படம் மக்களிடைய நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் பிரசன்னா, அஜித் நடிக்கும் குட் பேட் அக்லி திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகும் குட் பேட் அக்லி திரைப்படம் வருகிற பொங்கல் பண்டிகை முன்னிட்டு ரிலீஸ் ஆக உள்ளது. அதேநேரம் முழு வீச்சோடு தளபதியின் 69-ஆவது பட வேலைகளும் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த படத்துடன் விஜய் சினிமாவில் இருந்து விலகுகிறார்.

விஜயின் 69-ஆவது படத்தில் நரேன் நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியானது. விஜய் அஜித் படங்கள் ரிலீஸ் ஆகப்போகிறது என்றாலே ரசிகர்கள் சோசியல் மீடியாவில் மோதிக் கொள்ளும் வழக்கம் இருக்கும். அஞ்சாதே படத்தில் எதிர் எதிர் கதாபாத்திரங்களில் நடித்த பிரசன்னாவும், நரேனும் இப்போது அஜித் மற்றும் விஜயின் படங்களில் நடிக்கின்றனர். இதனால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்

#image_title
