நம்முடைய இந்து மதத்தில் எந்த ஒரு புதிய தொடக்கமும் தொடங்குவதற்கு முன்பாக கட்டாயம் நாம் விநாயகர் பெருமானை வழிபாடு செய்துதான் அந்த காரியத்தை தொடங்குவோம். அதாவது வீடுகளில் செய்யக்கூடிய பலகாரமாக இருந்தாலும் வீடுகளில் நடத்தக்கூடிய ஒரு மிகப்பெரிய அளவிலான சுப நிகழ்ச்சியாக இருந்தாலும் கட்டாயம் விநாயகப் பெருமானை முதலில் வணங்கிய பிறகு தான் நாம் அந்த ஒரு காரியத்தை தொடங்குவோம். அதற்கு முக்கிய காரணம் நாம் செய்யக்கூடிய செயல்கள் எந்த ஒரு தடையும் தடங்களும் இல்லாமல் நிறைவடைய வேண்டும் என்பதால் முதலில் விநாயகரை வணங்கி தொடங்குகிறோம். தடைகளைப் போக்கும் வல்லமை பெற்றவர் தான் விநாயகர்.
அப்படியே நம்முடைய வாழ்க்கையில் துன்பங்கள் இல்லாமல் பொருளாதார கஷ்டம் இல்லாமல் நல்ல உடல் ஆரோக்கியத்தோடு வாழ வேண்டும் என்றால் கட்டாயமாக நாம் விநாயகர் பெருமானை தினம் தோறும் பூஜை செய்து வழிபட வேண்டும். அவ்வாறு ஒருவர் விநாயகரை பற்றி கொண்டு தினமும் பூஜை செய்து வழிபாடு செய்து வருகிறார்கள் என்றால் அவர்கள் வாழ்க்கையில் தடைகள் என்ற ஒரு வார்த்தைக்கு இடம் இருக்காது. அதே சமயம் விநாயகர் பெருமானுக்குரிய மந்திரங்களை உச்சரித்து வழிபாடு செய்யும் சமயத்தில் நம்முடைய வாழ்க்கையில் இன்னும் மேன்மை கிடைக்கும். அப்படி நாம் தினமும் வீடுகளில் சொல்ல வேண்டிய விநாயகருடைய 16 திருமங்கலங்களை நீங்களும் அறிந்து கொள்ளுங்கள்.
ஓம் சுமுகாய நம: மங்களமான முகம் உடையவன்
ஓம் ஏக தந்தாய நம: ஒற்றை தந்தம் உடையவன்
ஓம் கபிலாய நம: பழுப்பு நிறம் உடையவன்
ஓம் கஜகர்ணிகாய நம: யானையின் காதுகளை உடையவன்
ஓம் லம்போதராய நம: பெரிய வயிறு உடையவன்
ஓம் விகடாய நம: அழகிய வடிவம் உடையவன்
ஓம் விக்னராஜாய நம: தடைகளை நீக்குபவன்
ஓம் விநாயகாய நம: தனக்கு மேல் நாயகன் இல்லாதவன்
ஓம் தூமகேதவே நம: புகை வண்ண மேனியன்
ஓம் கணாத்யக்ஷாய நம: பூத கணங்களின் தலைவன்
ஓம் பாலசந்திராய நம: குழந்தை சந்திரன் போல் ஒளிர்பவன்
ஓம் கஜாநநாய நம: யானை முகம் உடையவன்
ஓம் வக்ரதுண்டாய நம: வளைந்த தும்பிக்கை உடையவன்
ஓம் சூர்ப்பகர்ணாய நம: முறம் போன்ற காதுகள் உடையவன்
ஓம் ஹேரம்பாய நம: ஐந்து முகம் கொண்டவன்
ஓம் ஸ்கந்த பூர்வஜாய நம: முருகனுக்கு முன் பிறந்தவன்
பீகார் தேர்தலில் தேஜஸ்வி தலைமையிலான MGB கூட்டணி கடும் பின்னடைவை சந்தித்துள்ளது. காலையிலிருந்து தொடர்ச்சியாக NDA கூட்டணி முன்னிலை வகித்து…
தமிழகத்தில் இன்னும் ஐந்து மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த முறை ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள திமுக பல…
ராமநாதபுரம் மாவட்டம் எமனேஸ்வரத்தில் 5 ஆடுகளை மர்ம நபர்கள் சொகுசு காரில் ஏற்றிச் சென்றதாக மானாமதுரை போலீசுக்கு நேற்று மாலை…
பாஜக மாநில தலைமை பதவியில் இருந்து அண்ணாமலையை நீக்கியதில் நிர்வாகிகள் யாருக்குமே உடன்பாடு இல்லை. அதிலும் குறிப்பாக அதிமுகவுடன் கூட்டணி…
பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் விறுவிறுப்பாக வாகு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. யார் வெற்றி வாகை சூடுவார் என்று எதிர்பார்ப்பு நிலவி…
தெருநாய்களை தங்களுடைய வீட்டில் வைத்து மனைவி அதிக அக்கறை காட்டி வளர்ப்பதால் தங்கள் தாம்பத்திய உறவில் சிக்கல் ஏற்பட்டதாக கூறி…