தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு ஒத்திவைப்பு..? எத்தனை நாட்களுக்கு தெரியுமா..? மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!!

By Soundarya on வைகாசி 24, 2026

Spread the love

கொளுத்தும் வெயில் மற்றும் தீவிர வெப்ப அலை காரணமாக, பள்ளிகள் திறப்பதை மேலும் ஒரு வாரம் தள்ளிப்போட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போதைய கடுமையான சூழலைக் கருத்தில் கொண்டு, பள்ளித் திறப்பை ஒத்திவைக்க வேண்டும் என்று தனியார் பள்ளிச் சங்கங்களின் கூட்டமைப்பு தமிழக அரசுக்கு அவசரக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளது.

இதற்கிடையே, அண்டை மாநிலங்களான ஆந்திரா, தெலுங்கானா மற்றும் ஒடிசாவில் நிலவி வரும் கடுமையான வெப்ப அலையின் காரணமாக ஒரே நாளில் 62 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தச் சூழலைக் கவனித்து வரும் தமிழக அரசு, மாணவர்களின் நலன் மற்றும் பாதுகாப்பைக் கருதி பள்ளித் திறப்பைத் தள்ளிவைப்பது குறித்து தீவிரமாக ஆலோசனை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.