சேமிப்பு திட்டங்களில் பணம் செலுத்திய வாடிக்கையாளர்கள்…. மொத்தமாக வாரி சுருட்டிய தபால் துறை அதிகாரி…. 1 வருடம் கழித்து தட்டி தூக்கிய போலீஸ்…. அதிரடி நடவடிக்கை…!!

By Devi Ramu on புரட்டாதி 25, 2025

Spread the love

திண்டுக்கல் மாவட்டம் ஜி தும்மலபட்டியில் தபால் அலுவலகம் அமைந்துள்ளது. கடந்த ஆண்டு கொடைக்கானல் உபகோட்ட தபால் துறை ஆய்வாளர் பாண்டியராஜன் தபால் நிலையத்தில் ஆய்வு நடத்தி பல்வேறு சேமிப்பு திட்டங்களில் வாடிக்கையாளர்கள் செலுத்திய தொகை விபரங்களை தணிக்கை செய்தார்.

அப்போது சேமிப்பு கணக்கு, செல்வமகள் சேமிப்பு திட்டம், குறுகிய கால வைப்பு நிதி கணக்கு உள்ளிட்ட பல்வேறு சேமிப்பு திட்டங்களில் வாடிக்கையாளர்களின் பணம் வரவு வைக்கப்படாமல் சுமார் 52 லட்சத்து 5 ஆயிரத்து 609 ரூபாய் பணத்தை கையாடல் செய்தது தெரியவந்தது. இதுகுறித்து விசாரணை நடத்தி கிளை தபால் அலுவலக அதிகாரி முனியாண்டியை பணியிடை நீக்கம் செய்து உயரதிகாரிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

   

இதனையடுத்து முனியாண்டி தலைமறைவாகி விட்டார். அவரை தனிப்படை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் கிணத்துக்கடவு பகுதியில் முனியாண்டி தங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி முனியாண்டியை போலீசார் கைது செய்தனர்.